• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-03 14:49:41    
Hong luo கோயில்

cri

Hong luo கோயில் பூங்கா, huai rou மாவட்ட நகரின் வடப்பகுதியிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Hong luo மலைஅடிவாரத்தில் அமைந்துள்ளது. இது பெய்சிங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 800 ஹெக்டராகும். தற்போது, இது, தேசிய AAAA தர நிலை சுற்றுலா பிரதேசமாகும். நீண்டகால வரலாறு மற்றும் பண்பாடு, விநோதமான நிலவியல் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை ஆகிய காரணங்களால், Hong luo கோயில் பூங்கா, ஒரு எழில் மிக்க பூங்காவாகியது.


இதன் வடக்கில், Hong luo மலையும், தெற்கில், Hong luo ஏரியும் உள்ளன. Hong luo மலையின் மேற்குசிகரம் கடல், மட்டத்திலிருந்து 812.9 மீட்டர் உயரமுள்ளது. கிழக்குசிகரம் கடல் மட்டத்திலிருந்து 811.9 மீட்டர் உயரமுள்ளது.

Hong luo கோயில் பூங்காவின் பெரும் பகுதிகளில், காடுகள் அடர்ந்து வளர்கின்றன. பழங்கால மரங்கள் விண்ணை முட்டுகின்றன. Hong luo கோயில் பூங்காவில் இரு மலைகள் விரிந்து காணப்படுகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால், ஒரு பெரிய பறவை போல் காட்சியளிக்கின்றது. இது, Hong luo கோயில் பூங்காவின் பழமை வாய்ந்த கோயில்களையும் ஆலயங்களையும் பாதுக்காக்கின்றது. அங்குள்ள மூங்கில் காடு, ஓய்வு மண்டங்கள், நடைபாதைகள், பாலங்கள், அழகிய மலைச்சாரல்கள், ஏரிக்கரைகள், தண்ணீரால் சூழ்ப்பட்ட சிறு நிலத் தீவுகள் முதலியவற்றைப் பார்வையிட, ஒரு நாள் போதாது என்றே கூறலாம். ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பிலே அமைந்தாலும் பசுமையான இயற்கைக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.


இன்னும் அதிகமாக அது பற்றி அறிய வேண்டுமானால், நீங்கள் அதை நேரில் போய்ப் பார்க்க வேண்டுமேயன்றி, அதன் கச்சிதமான கவர்ச்சியான வனப்பை வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாது.