• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-03 14:36:46    
சீனாவின் ஹானி இனம்

cri

ஹானி இனம், சீனாவின் யீ இனம், ல கு இனம் முதலிய இனங்களைப் போல், பழைங்கால ச்சியாங் இனத்திலிருந்து வளர்கின்றது. தற்போது ஹானி இன மக்கள், யுங்நான் மாநிலத்தின் தென் மேற்கு பகுதியிலான xinping, zhenyuan, mojiang, yuanjiang, honghe முதலிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை, 12 இலட்சத்து 50 ஆயிரமாகும். ஹானி இனத்துக்கு சொந்த மொழி உண்டு. அது, 3 வகை வட்டார மொழிகளாகப் பிரிக்கப்பட்டது.

 

இம்மொழிகள் பெரிதும் வேறுபடுவதால், அம்மொழி பேசுகிறவர்கள் வெளியே தொடர்பு கொள்வது கடினமானது. ஹானி இன மக்களின் மொழிக்கு எழுத்துக்கள் இல்லை. 1957ம் ஆண்டு வரை, இலத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு எழுத்துக்களை உருவாக்கினர். ஓசமிச காவியம், ஹானி இன மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களில் மிக விரிவான பரப்பும், ஆழ்ந்த செல்வாக்கும் வாய்ந்த புராணக் கதையாகும்.

ஹானி இன மக்களின் கிராமங்கள்,பெரும்பாலும் 1000 முதல் 2500 மீட்டர் கடல் மட்டம் வரையான மலை பிரதேசங்களில் கட்டியமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுவதோடு, தேயிலை பயிரிடுவதில் வல்லவர்கள். ஹானி இன மக்கள் மிக நீண்டகாலமாக தேயிலையைப் பயிரிடுகின்றனர். இப்பிரதேசத்தின் தேயிலை வளையும் அளவு, யுங்நான் மாநிலம் முழுவதுமான தேயிலை அளவில் 30 விழுக்காட்டுக்கு மேல் வகிக்கிறது. தேநீர் மதுபானம் ஆகிய இரண்டையும் ஹானி இன மக்கள் மிகவும் விரும்புகின்றனர். முன்பு, தீ, குடும்பத்தின் ஓர் உயிர்நாடி போல் மிக இன்றியமையாதது என்று ஹானி இன மக்கள் கருதுகின்றனர்.

 ஒவ்வொரு குடும்பத்திலும் சில தீ அடுப்புகள் இருக்கின்றன. அடுப்புகளில் இடைவிடாமல் தீ எரிந்து கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு அடுப்பும், ஒரு குறிப்பிட்ட நோக்கிற்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், நோக்கிற்கு அப்பாற்பட்டுப் பயன்படுத்தப்பட கூடாது. ஹானி இன மக்கள், பல கடவுள்களையும் மூதாதையர்களையும் வழிபடுகின்றனர். வசந்த விழா, நிலா விழா முதலிய ஹான் இன மககளின் விழாக்களைத் தவிர, ஆண்டுக்கு 10ம் திங்கள் திருவிழா,6ம் திங்கள் திருவிழா என இரண்டு புத்தாண்டு விழாக்களையும் கொண்டாடுகின்றனர்.