• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-03 12:07:43    
சீனாவில் தற்சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள அதிவிரைவு தொடர் வண்டி

cri

சீனா தற்சார்பாக புல்லட் தொடர்வண்டி எனப்படும் அதிவிரைவு தொடர்வண்டியை தயாரித்துள்ளது. இது மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். அதிவிரைவு தொடர்வண்டிகளின் வரிசையில் இவ்வகை இக்கால மாதிரியாகும். இந்த தொழில் நுட்பத்தில் ஏற்கெனவே வளர்ந்துள்ள ஜப்பான், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை சீனா இதன் மூலம் பெறுகிறது. இவ்வகை அதி விரைவு தொடர்வண்டிகள் காற்று புகாமல் இருப்பது, இயங்கு ஆற்றல் மற்றும் சீரான பயணம் ஆகியவற்றிற்கு உயர் தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது.

ஏறக்குறைய 7 டன் எடை கொண்ட இந்த அதிவிரைவு தொடர்வண்டி உலகத்திலேயே குறைந்த எடை கொண்டதாகும். எரியாற்றல் சிக்கனத்திற்காக இந்த வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது என்று தென்னக சீன தொடர்வண்டி மற்றும் போக்குவரத்து நிறுவன தொழில் நுட்ப மையத்தின் துணை இயக்குனர் மா யுன்ஷ_யுஆங் கூறினார். அடுத்த ஆண்டின் ஆறு திங்கள் காலத்தில் 10 அதிவிரைவு தொடர்வண்டிகளை தென்னக சீன தொடர்வண்டி மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் உதவியோடு செயல்படும் சீபாங் நிறுவனம் தொடர்வண்டி அமைச்சகத்திற்கு வழங்க உள்ளது. 8 பெட்டிகளை கொண்ட இந்த தொடர்வண்டிகள் 600 பயணிகள் பயணம் செய்யும் வசதி கொண்டது. இவை 115 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பெய்சிங் - தீயன்ஜின் பாதையில் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னர் ஆகஸ்ட் திங்கள் இயக்கப்படவுள்ளது. தற்போது 80 நிமிடமாக உள்ள பயணநேரத்தை இது 30 நிமிடமாக குறைக்கும்.

இதற்கு முன் சீனா தற்சார்பாக தயாரித்த விரைவு தொடர்வண்டியின் வேகம் 250 கிலோமீட்டராகும். இவை பெய்சிங் - கெர்பின், பெய்சிங் - ஷாங்காய் மற்றும் பெய்சிங் -குயுஆங்ட்ச்யு இருப்புப்பாதைகளில் எப்ரல் 18 ஆம் நாள் முதல் இயக்கப்படுகின்றன.

ஓலிம்பிக் இடங்கள் கொண்ட தபால் தலைகள்

2008 பெய்சிங் ஓலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு சீனா பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய முயற்ச்சிகளில் ஒன்றாக, ஆறு தபால் தலைகள் அடங்கிய தொகுதியை 20 ஆம் நாள் சீன தபால் நிலையம் வினியோகிக்க தொடங்கியது. இவை அனைத்தும் 8.6 யுவான் மதிப்புடையதாகும். தேசிய விளையாட்டு பயிற்சியரங்கு, சீன வேளாண் மற்றும் பெய்சிங் பல்கலைக்கழகங்களின் பயிற்சியரங்குகள், சிங்தௌ ஒலிம்பிக் பாய்மர போட்டி மையம், லௌஷான் மதிவண்டி போட்டியரங்கு, தேசிய நீச்சல் மையம் ஆகிய ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்களை இந்த தபால் தலைகள் கொண்டுள்;ளன. தேசிய விளையாட்டு அரங்கு அல்லது பறவை கூடு அரங்கை நினைவுப் படுத்தக்கூடிய 6 யுவான் மதிப்பிலான தபால் அட்டை இந்த தபால் தலையுடன் வினியோகிக்கப்பட்டது. 2001 ஜூலை திங்கள் 2008 ஒலிம்பிக் போட்டியை உபசரிக்கும் உரிமையை பெற்றபின் சீன தபால் நிலையம் தபால் தொகுதிகளை வெளியிடுவது இது நான்காவது முறையாகும்.

ஐஸ்லாந்து அரசுத்தலைவராக நடித்து வெள்ளை மாளிகைக்கு தொலைபேசி அழைப்பு

ஐஸ்லாந்து அரசுத்தலைவர் என்று வெள்ளை மாளிகையை நம்ப செய்து அமெரிக்க அரசுத்தலைவர் ஜார்ஜ் w புஷ_டன் தொலைபேசியில் பேச பதிவு பெற்றிருக்கிறார் ஒரு பதின்வயது வாலிபர். அவருக்கு வயது 16. ஆனால் அரசுத்தலைவர் புஷ்க்கு அழைப்பு செய்வதற்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டார். விஃபில் அட்லசன் டிசம்பர் முதல் நாள் வெள்ளை மாளிகைக்கு தொடர்பு கொண்டு தன்னை ஐஸ்லாந்து அரசுத்தலைவர் ஒலஃபூர் ரக்னர் கிரிம்சன் என அறிமுகப்படுத்திக்கொண்டு டிசம்பர் 3 ஆம் நாள் அமெரிக்க அரசுத்தலைவருக்கு தொலைபேசி அழைப்பு செய்ய அனுமதி பெற்றுள்ளார். ஆனால் டிசம்பர் 3 ஆம் நாள் அவர் ஜஸ்லாந்து காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டார். வெள்ளை மாளிகையின் செய்தி கூட்டத்தில், குறிப்புகள் படி அட்லசன் அனைவரும் தொடர்பு கொள்ளக்கூடிய பொது தொலைபேசியிலிருந்து அழைத்திருந்ததாக அரசுத்தலைவர் புஷின் பேச்சாளர் டனா பெரினோ அம்மையார் தெரிவித்தார்.

உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் இந்திய கோவில் இடம் பெற்றது

இந்திய தலைநகர் புது டெல்லியிலுள்ள அக்ஷார்தம் கோவில் உலகிலேயே மிக பெரிய இந்து கோவில் என்று உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் பதிவு பெற்றுள்ளது. கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தின் முக்கிய மேலாண்மை குழுவின் மூத்த உறுப்பினர் மைக்கிள் விற்றி இரண்டு சான்றிதழ்களை போசாசன்வாசி அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சமஸ்தானத்திற்கு வழங்கினார். பராமுக் மகாராஜ் சுவாமிகளால் மட்டுமே அதிக கோவில்கள் அர்ச்சிக்கப்பட்டதும் மற்றும் உலகிலேயே மிக பெரிய இந்து கோவில் என்ற இரண்டு பதிவுகள் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.

போசாசன்வாசி அக்ஷார் புருஷோத்தம் சுவாமி நாராயணன் சமஸ்தானத்திற்கு தலைவரான மேன்மைதங்கிய பராமுக் மகாராஜ் சுவாமிகள், ஏப்ரல் 1971 முதல் நவம்பர் 2007 வரை ஐந்து கண்டங்களில,; 713 கோவில்களை இந்து முறைப்படி அர்ச்சனை செய்தது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு பெறுவதாகவும், அவைகளில் மகத்தானதும், கைகளால் செதுக்கிய அதிக அளவு அலங்காரமும் செய்யப்பட்ட இந்த சமஸ்தானத்திற்கு செந்தமான புது டெல்லியிலுள்ள சுவாமி நாராயணன் அக்ஷார்தம் கோவில், உலகிலேயே மிக பெரிய இந்து கோவிலாக உள்ளது என்றும் சான்றிதழ்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உலகத்திலேயே அதிக வயதானவர் இறப்பு

ஒரு நூற்றாண்டுக்கு அதிகமாக வாழ்ந்து, உலகிலேயே அதிக வயதானவராக எண்ணப்படுகின்ற உக்ரேன் நாட்டை சேர்ந்த கிரிகாரி நெஸ்டர் டிசம்பர் 9 ஆம் நாள் காலமானார். அவரது வயது 117. கிரிகாரி நெஸ்டர் மேற்கு உக்ரேனிலுள்ள லோவ் பகுதியில் 1891 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 15 ஆம் நாள் பிறந்தார். ஆடு மேய்பவரான நெஸ்டர் திருமணமாகாதவர். அறிக்கை படி இவர் கடைசிவரை தீவிர நோய்களையோ, உடல் நல குறைவுகளையோ பெறவில்லை என்பதும், மது அருந்தமாட்டார் என்பதும் ஆச்சரியம் தரும் செய்தி. உக்ரேனின் பதிவேட்டாளர்கள் நெஸ்டரை நாட்டின் வயதானவராக பதிவு செய்வதோடு, அவருடைய பெயரை கின்னஸ் பதிவேட்டில் பதிக்க முயற்சிகள் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் இது நிறைவேறுவதற்கு முன்னர் அவர் இறந்துவிட்டார்.