• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-04 17:30:50    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நுழைவுச்சீட்டு

cri

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 2வது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை பணி 30ம் நாள் நிறைவடைந்தது என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்பின் நுழைவுச்சீட்டு விற்பனவு மையம் 31ம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டியின் 2வது கட்ட துவக்க, நிறைவு விழாவின் நுழைவுச்சீட்டு விற்பனை பணி நிறைவடைந்துள்ளது. தற்போது, வினியோகக் கட்டத்தில் நுழைகின்றது. இதன் போது, நுழைவுச்சீட்டு பற்றிய புதிய முன்கூட்டியே தீர்மானித்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2008ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 3வது கட்ட நுழைவுச்சீட்டு விற்பனை பணி துவங்கும். ஏனையவை ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவுச்சீட்டுகளை மக்கள் வாங்கலாம். ஊனமுற்றவர்களுக்கான பாரலிம்பிக் போட்டி பற்றிய நுழைவுச்சீட்டு விற்பனை பணி துவங்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 2007-2008 ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடரின் அரைகால் இறுதி ஆட்டத்தின் சீட்டெடுப்பு விழா 21ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Nyon நகரில் நடைபெற்றது. இப்போட்டியின் சாம்பியன பட்டம் பெற கூடிய சில பிரபலமான அணிகள் அரைகால் இறுதி ஆட்டங்களில் சந்தித்தன. கடந்த போட்டியின் சாம்பியன் பட்டத்தைப் பெற்ற இத்தாலி AC Milan அணியும் பிரிட்டன் FC Arsenal அணியும் மோதின. இத்தாலி Inter Milan அணியும் பிரிட்டன் FC Liverpool அணியும் மோதின. ஸ்பெயின் FC Real Madrid அணியும் இத்தாலி AS Roma அணியும் மோதின. இவை இப்போட்டியின் குவி மைய ஆட்டங்களாகும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அடுத்த மார்ச் திங்கள் ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் போட்டித்தொடரின் அரைகால் இறுதி ஆட்டம் நடைபெறும்.

சர்வதேச பூப்பந்து கூட்டமைப்பு 20ம் நாள் புதிய உலக தரவரிசையை வெளியிட்டுள்ளது. 5 நிகழ்ச்சிகளில், சீன வீரர்களும் வீராங்கணைகளும் 4 முதலாவது இடத்தைச் தொடர்ந்து பெற்றுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில், சீன வீரர் Lin Dan உலக முதலாவது இடம் பெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில், சீன வீராங்கணை Xie Xingfang உலக முதலாவது இடம் பெற்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவில், சீன Zhang Yawen, Wei Yili இணை முதலாவது இடம் பெற்றுள்ளனர். Zheng Bo, Gao Ling ஆகியோர், கலப்பு இரட்டையர் பிரிவிலான முதலாவது இடம் பெற்றுள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், மலேசிய TAN Boon Heong, KOO Kien Keat இணை உலக முதலாவது இடம் பெற்றுள்ளனர்.