2007ம் ஆண்டு, திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் நபர்வாரி நிகர வருமானம், 2006ம் ஆண்டில் இருந்ததை விட, 14.5 விழுக்காடு அதிகமாக இருந்தது. தொடர்ந்து 5 ஆண்டுகளாக, 10 விழுக்காட்டுக்கு மேலான அதிகரிப்பை திபெத் நனவாக்கியுள்ளது என்று திபெத்தின் தொடர்புடைய வாரியங்கள் கூறியுள்ளன.
2007ம் ஆண்டு, திபெத்தின் பல்வேறு இடங்கள், வேளாண் மற்றும் கால்நடைத் துறைகளின் உட்புற வருமான அதிகரிப்பு பற்றிய உள்ளார்ந்த ஆற்றலை மேலும் வெளிக்கொணந்தன. 70க்கு மேற்பட்ட சிறப்பு வேளாண் மற்றும் கால்நடைத் துறை திட்டப்பணிகளை நடத்தின. இவை, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் புதிய வருமான அதிகரிப்புத் துறையாகவும், பொருளாதாரத்தின் புதிய அதிகரிப்புத் துறையாகவும் மாறியுள்ளன. தவிர, தன்னாட்சிப் பிரதேசம், கிராமப்புறச் சுற்றுலாவை ஆக்கப்பூர்வமாக வளர்த்து, கிராமப்புறங்களின் சுற்றுலா தொழில் மயமாக்கத்தை முன்னேற்றியது. விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமான அதிகரிப்பை பயனுள்ள முறையில் முன்னேற்றியுள்ளது.
|