எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும், சுற்றுச் சூழல் பாதுகாப்பு திட்டப்பணி, உள்ளுர் மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மட்டுமல்ல, உள்ளூர் மக்களுக்கும் நலன் தரும் என்று Wenquan கிராமவாசியான 74 வயதான முதியோர் liu தெரிவித்தார். அவர் கூறியதாவது:
காற்று ஆற்றல் மின்னாக்கி திட்டப்பணியைக் கண்டு நாங்கள் மகிழ்கின்றோம். ஏனென்றால், இது நமக்கு நன்மை பயக்கும். இது நிலக்கரியைப் பயன்படுத்த தேவையில்லை. சுற்றுச் சூழலை மாசுபடுத்தவில்லை. இது எதிர்கால தலைமுறையினருக்கு நலன் தரும். தவிர, இது பெரிய இரைச்சல் ஏற்படுத்துவதில்லை. இத்திட்டப்பணியின் வளர்ச்சி, நம் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றார் அவர்.
பொருளாதாரத்தை வளர்ப்பதோடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீது கவனம் செலுத்துவது என்பது, Shandong மாநில மக்களின் ஒத்த கருத்தாகும். சுற்றுச் சூழல் பாதுகாப்பு மூலம் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னேற்றி, பொருளாதார சீர்திருத்த வேகத்தை விரைவுபடுத்தவுள்ளதாக Shandong மாநிலத்தின் வெளிநாட்டு வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் mengjianxin கூறினார். அவர் கூறியதாவது:
மூலவளத்தை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தாமல் தவிர்க்க வேண்டும். லட்சியத்தை, இச்சமூகத்துக்கு விட்டுச் சென்று, மாசுபாட்டை எதிர்கால தலைமுறையினருக்கு வழங்கக் கூடாது. அனைத்து திட்டப்பணிகளின் எரியாற்றலைச் சிக்கனப்படுத்துவது, முதலிய துறைகளில் நன்மையையும் தீமையையும் சீர்தூக்கிப பார்க்க வேண்டும். அதற்குப் பின் சில தலைசிறந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். 1 2
|