• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-08 11:04:05    
லுகொ பாலம்

cri

லுகொ பாலம், ஃபேங் த்தாய் பிரதேசத்தின் லுகொ பால நகரின் யொங்திங் ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ளது. தற்போது, இது, பெய்ஜிங்கின் மிகப் பழமையான கற்களால் கட்டியமைக்கப்பட்ட பாலாகும். முன்பு, யொங்திங் ஆறு, லுகொ ஆறு என அழைக்கப்பட்டது. அதனால், இப்பாலம், லுகொ என்ற பெயர் சூட்டப்பட்டது.

1189ம் ஆண்டு, இப்பாலம் அமைக்கப்படத் துவங்கியது. 1444ம் ஆண்டு மற்றும் 1698ம் ஆண்டில், சீரமைக்கப்பட்டது.

இது, யொங்திங் ஆற்று நீரின் சிறப்பின்படி, வடிவமைக்கப்பட்டது. இப்பாலம் முழுவதும் வெண்ணிற கற்களால் உருவானது. இதன் நீளம், 266.5 மீட்டராகும். இப்பாலத்தில் 11 வளைவுகள் இருக்கின்றன. பாலத்தின் அகலம், 7.5 மீட்டராகும். இடது பக்கத்தில், 140 கல் சித்திர தூண்கள், வலது பக்கத்தில், 141 தூண்கள் இருக்கின்றன. இத்தூண்களின் உயரம், 1.4 மீட்டர் ஆகும். அவற்றின் மேலே, கற் சிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இப்பாலத்தின் அனைத்து பகுதிகளும், இரும்புக்கம்பிகளால், உறுதிப்படுத்தப்பட்டன. இதன் மூலம் இப்பாலம் வசந்தகால பணிக்கட்டிகளையும் வெள்ள பெருக்கையும் தாங்கி இருக்கலாம்.

இது, தன் தலைசிறந்த கற் சிலைக் கலையால், உலகில் புகழ்பெற்றுள்ளது. இது, 281 தூண்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு தூணிலும், சில வம்சக்காலங்களில் செதுக்கிய கற் சிங்கங்கள் இருக்கின்றன. இவற்றில், பல கற் சிங்கங்கள், மிங் மற்றும் சிங் வம்சக்காலங்களில் செதுக்கப்பட்டவை. இவை, பல தோற்றங்களைக் கொண்டு, உயிர்த்துடிப்புடன் காணப்படுகின்றன. இவை, லுகொ பாலத்திலுள்ள கற் சிலைகளில் தலைசிறந்த கலைநயம் கொண்டவை. 1984ம் ஆண்டு, தொல்பொருள் பணியாளர்கள், எண்ணிக்கையை சரிபடுத்திய பின், கணக்குப்பார்த்து, இப்பாலத்தில் 489 கற் சிங்கங்கள் இருப்பதாக அறிவித்தனர்.

இதன் கிழக்கு பகுதியில், Wan Ping மாவட்ட நகர் இருக்கிறது. 1937ம் ஆண்டு ஜுலை திங்கள் 7ம் நாள், இங்கு லுகொ பாலச் சம்பவம் நடந்தது. இதில் ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரின் தீ மூட்டப்பட்டது. நகரச் சுவரில், துப்பாக்கி ரவைகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன. தற்போது, இம்மாவட்ட நகர், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவு இடமாக மாறியுள்ளது. இதன் வட பகுதியில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் நினைவுக் காட்சியகம் இருக்கிறது. நகரின் கிழக்குப் பகுதியில், இப்போரில் உயிரிழந்த வீரர்களின் கல்லறைகள் இருக்கின்றன. நகர் மாளிகையின் மேல், ஜீலை 7ம் நாள் சம்பவத்தின் நினைவுக் காட்சியகம் மற்றும் சீனப் பண்டைய பாலங்களின் கண்காட்சியகம் அமைந்துள்ளன.