• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-08 19:49:55    
Pu er நகரமும், தேயிலையும்

cri

தேயிலை மற்றும் குதிரைப்பாதையில் இப்பாதையில் பயணம் செய்தோர், தாங்களும், தமது குதிரைகள் மற்றும் விலங்குகளும் ஓய்வு எடுக்க தெரிவு செய்த இடமாக இருந்தது Li Jiang.

இந்த தேயிலை மற்றும் குதிரைப்பாதையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்த திபெத் மற்றும் Xi இனத்தோரின் சொந்த ஊராக அமைந்தது Li Jiang. யுன்னான் மாநிலத்தின் வட மேற்கே, Jiang Shu ஆற்றின் நெடுகில் அதன் மையத்தில் அமைந்துள்ளது Li Jiang. ஏராளமான குன்றுகளும், வடி நிலங்களும், பள்ளத்தாக்குகளுமாய் நில, வன வளங்கள் குறிப்பாக தாது விளங்கள் நிறைந்த, சுற்றுலா வளம் நிறைந்த ஒரு இடம் Li Jiang. 800 ஆண்டுகால தனிச்சிறப்புடைய பண்பாடு கொண்டது Li Jiang. சீனாவின் வெனிஸ் நகரம் என்று அழைக்கப்பட்டது. புவியின் வட பாதியின் தொலை தெற்கில் அமைந்த மாபெரும் பனி மலையான Yu Long பனி மலை, பனி மலை அருங்காட்சியகமாய், தாவர இனங்கள் செறிவான இடமாய் உள்ளது. Lao Jun மலை, உலக தாவரவியல் கருவூலமாக, பெரும் எண்ணிக்கையிலான தாவர வகைகளை கொண்டுள்ளது. இவை Li Jiangவின் இயற்கை வனப்புக்கு அழகு சேர்ப்பவை. இது மட்டுமல்ல இன்று வரை பயன்பாட்டிலுள்ள சித்திரவடிவ எழுத்துக்களை கொண்ட ஒரே இடம் Li Jiang தான். Dongba எழுத்துக்கள், அல்லது சித்திர எழுத்துக்கள், Baisha சுவரோவியங்கள், Naxi இசை இலையெல்லாம் வாழும் சிதிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

உலக பண்பாட்டு மரபுச் செல்வமாக பட்டியலிடப்பட்ட சொற்ப நகரங்களில் Li Jiangம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.


தேயிலை மற்றும் குதிரைப்பாதையிலுள்ள ச்தெங் கடைவீதி மட்டுமே பல போர்களையும், நெருக்கடிகளையும், குழப்பங்களையும் எதிர்கொண்ட பின்னும், இன்றும் நிலைத்து நிற்கும் ஒரு சந்தையாகும்.
இன்றைக்குள்ள சிதெங் வீதியில் நன்றாக பாதுகாக்கப்பட்டு வரும் நாடக அரங்கு, விடுதிகள், கோயில் இவையெல்லாம் இவ்வீதிக்கு அழகு சேர்ப்பதோடு மிகவும் திடிப்பான, மக்கள் புழக்கம் அதிகமாக காணப்படும் ஒரு சந்தையாக வைத்துள்ளன. யுன்னான் மாநிலத்தின் ஷாஸி நகரில் உள்ளது இந்த சிதெங் கடைவீதி. நகருக்கு அருகிலுள்ள ஆர்ஹாய் ஏரி, லான்சாங் ஆறு மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் இவையெல்லாம் மிகக்கடினமான ஒரு புவிச்சூழலை ஏற்படுத்த, ஷாஸி நக ஒரு தொடர்பு நகராக, தேயிலை மற்றும் குதிரைப்பாதையின் தொடர்பு மையமாக அமைந்திருந்தது.
இந்நகர் வழியாகவே திபெத்துக்கும், பெருநிலப்பகுதிக்கும் செல்லவேண்டும். காலப்போக்கில் தென்கிழக்காசியா, மேற்காசியா, கிழக்காசியா ஆகியவற்றின் வர்த்தகர்கள், இந்நகரை ஒரு விநியோக மையமாகக் கொண்டு தங்களது பொருட்களை பரிவர்த்தனை செய்து கொண்டனர். இங்குதான் பண்டைக்காலத்தில் திபெத்தின் மூலிகை, விலங்குத்தோல் முதலியவை உப்பு, தேயிலை முதலியவற்றுக்காக பரிமாறிக்கொள்ளப்பட்டன.


குதிரைகளின் குளம்படியும்,பொருட்களின் பரிவர்த்தனையிலான பேரம் பேசும் ஒலியும், மக்கள் நடமாட்டத்திலான இரைச்சலுமாய் ஒருகாலத்தில் மிகவும் பரபரப்பாக இருந்த சிதெங் வீதி, ஷாஸி நகருக்கு பெரும் செல்வாக்கு ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையல்ல.