• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-08 20:31:28    
நேயர்கள் எழுதிய கடிதம்

cri

கலை: வணக்கம் நேயர்களே. உங்கள் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் தொகுப்பாக இடம்பெறும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் இன்று மீண்டும் சந்திக்கிறோம். தொடரும் உங்கள் அன்பான ஆதரவுக்கு எமது நன்றிகள்.


க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியில் முதல் கடிதம் சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி கீழ் மணம்பேடு வளவனூர் ஏ. கண்ணன் எழுதியது. சீனாவில் 130 கோடி மக்கள் தொகையில் 14 கோடியே 40 லட்சம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்கள் தனிமை நீங்கி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இவர்களுக்கு மருந்து கொடுக்க, பராமரிக்க தாதியர்கள் உள்ளனர். இத்தாதியர் முதியோருக்கு அன்புடன் அற்புதமான சேவை செய்கின்றனர். முதியோரை கவனிக்கும் தாதியரை பற்றிக் கேட்டபோது, 54 வயதான எனக்கும் கண்கள் கலங்கியது. நல்ல ஒரு தொகுப்பு.
கலை: அடுத்து இலங்கை காத்தான்குடி ப. பிர்தௌசியா எழுதிய கடிதம். சீன வானொலியை நாங்கள் குடும்பத்துடன் கேட்டு மகிழ்ந்து வருகிறோம். நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிமையாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பதே அதற்கு காரணம். மக்கள் சீனம், சீனப் பண்பாடு, மலர்ச்சோலை போன்ற நிகழ்ச்சிகள் எங்களுக்கு மிகவும் பிடித்தமானவையாகும்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து பாண்டிச்சேரி பெரியகாலாப்பட்டு பி. சந்திரசேகரன் எழுதிய கடிதம். சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் இறால் சூப் செய்வது பற்றிய குறிப்பு இடம்பெற்றது. புதுமையான சீன உணவு, செய்வதும் எளிமை என்பது சமையல் குறிப்பு வழங்கிய வாணியின் விளக்கத்தின் மூலமே புரிந்தது. நன்றி.
கலை: அடுத்து திருச்சி மணமேடு எம். தேவராஜா எழுதிய கடிதம். 10 ஆண்டுகளில் ஹாங்காங் பொருளாதாரத்தின் நிலைநிறுத்தம் பற்றி கேட்டேன். கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பாக ஆசிய நாணய் அநெருக்கடியிலிருந்து தப்பி ஹாங்காங் வழமையான வளமான பொருளாதார நிலையை தக்கவைக்க, சீனப் பெருநிலப்பகுதியின் உறவும் ஆதரவும் முக்கிய காரணம் என்பதில் ஐயமில்லை. தாய்நாட்டுடன் இணைவதற்கு முன்பு இருந்த பொருளாதாரத்தை விட தற்போது இருமடங்கு உயர்ந்திருப்பது, இதற்கு நல்ல சான்ராகும்.


க்ளீட்டஸ்: தொடர்ந்து லங்கை காத்தான்குடி நேயர் எம். பி. ஃபாத்திமா சஸ்னா எழுதிய கடிதம். சீன வானொலிக் குழுவினர் மேற்கொண்ட தெற்காசியப் பயணம் பற்றி சீனத் தமிழொலி மலர்களின் மூலம் அறிந்துகொண்டேன். இது போன்ற பயணங்களும், கருத்தரங்குகளும் சீன மற்றும் இந்திய நாட்டின் நட்புறவை வலுப்படுத்தும் என நம்புகிறேன். தி. கலையரசி அவர்கள் கூறியதை போல நேயர்களுக்கும் வானொலி நிலையத்தினருக்கும் இடையிலான நட்பு இமய மலை போல நீடூழி வாழ வேண்டும்.

கலை: அடுத்து மலர்ச்சோலை நிகழ்ச்சி பற்றி ராசிபுரம் எஸ். திலகவதி எழுதிய கடிதம். சீனாவில் ச்ச்சுவான் மாநிலத்தில் மிகப்பெரிய வளைகுடாப் பாலம் கட்டியமைக்கப்படுகிறது. 36 கிலோமீட்டர் நீளமுடைய இப்பாலம் நகரில் மிகப்பொலிவுடன் இருமருங்கிலும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு கட்டப்படுகிறது. இப்பாலம் கட்டியமைக்கப்பட 180 கோடி யுவான் செலவு பிடிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. சுவையான தகவல்.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி மு. அ. நதா மின் ஹத் எழுதிய கவிதை.
கடலில் அலைகளில் ஓசை மலர்களில் வண்டுகளின் ஓசை வானில் இடியின் ஓசை
காட்டில் பறவைகளின் ஓசை மலையில் அருவியின் ஓசை என் உள்ளத்தில் தினமும் சீன வானொலியின் ஓசை.
கலை: அடுத்து சீனக் கதை நிகழ்ச்சி குறித்து தார்வழி பி. முத்து எழுதிய கடிதம். மனிதர்களிடையே கடைபிடிக்கவேண்டிய பாகுபாடு மற்றும் பரிந்துரை எப்படி இருக்க வேண்டும் என இரண்டு கதைகள் விளக்கின. மனிதர்களை நல்வழிப்படுத்தும் சீனக்கதைகளை கேட்டு மகிழ்ந்தேன்.
க்ளீட்டஸ்: தொடர்ந்து வெண்ணந்தூர் எஸ். சுப்பிரமணி எழுதிய கடிதம். சீனத் தேசிய இனக் குடும்பம் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான தகவல்களை கொண்டு வருகிறது. உங்கள் குரல் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த சீன வானொலி நேயர் மன்றத்தினர் அனுப்பும் ஒலிப்பதிவுகள் இடம்பெறுகின்றன. ஒலிம்பிக் தொடர்பான செய்திகள் எல்லாம் அனைத்தும் நன்றாக இருந்தன.
கலை: அடுத்து சிறுநாயக்கன்பட்டி கே. வேலுச்சாமி எழுதிய கடிதம். 2008ம் ஆண்டில் பெய்சிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் போது, சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் இருக்க மின்கல வாகனங்களை பயன்படுத்த சீன அரசு திட்டமிட்டுள்ளது என்ற செய்தியை கேட்டேன். இது மிகவும் வரவேற்கத்தக்கது. இந்த மின்கல வாகனங்களை தயாரிக்க உலகின் மற்ற கார் தயாரிப்புக்கான சொலவை விட 20 விழுக்காடு குறைவான செலவே ஆகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.


க்ளீட்டஸ்: தொடர்ந்து தென்பொன்முடி நேயர் தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். 44 ஆண்டுகளை கடந்தாலும், சீன வானொலி தமிழ் ஒலிபரப்பு எங்களை பொறுத்தவரை என்றும் இளைய கன்னியாகவே தோன்றுகிறது. செய்திகள், செய்திதொகுப்பு வாயிலாக சீனா மற்றும் உலகச் செய்திகளையும், மற்ற நிகழ்ச்சிகளின் மூலம் சீனா மற்றும் சீன மக்கள் பற்றியும் அறிந்துகொள்கிறோம். நேயர்களே உயிர்மூச்சு என எண்ணி அவர்களது விருப்பங்களை நிறைவேற்றி ஊக்கவிக்கும் சீன வானொலியின் பணி என்றென்றும் தொடரவேண்டும். சிற்றலை ஒலிபரப்பில் சீர்மிகு பாதையில் நடைபோட நாங்கள் என்றும் உறுதுணையாய் நிற்போம்.