• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-09 14:38:35    
வூ ஹான் நகரில் முதியோரின் இன்பமான வாழ்க்கை

cri

முதியோரை மதிப்பது என்பது, சீனாவின் தலைசிறந்த பாரம்பரிய நற்பண்பு ஆகும். சீன மக்களின் மதிப்பு பற்றிய உணர்வில் அடிப்படை வரையறையாகவும் இதுவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் சமூக சேம நலன்களை முதியோர் அனுபவிப்பது தொடர்பான கொள்கை முழுமையாகி வருகிறது. முதியோர்கள் மென்மேலும் இன்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த கட்டுரையில், சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹுபெய் மாநிலத்தின் வூ ஹான் நகரில் வாழும் முதியோர்களின் வாழ்க்கை பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.

2007ஆம் ஆண்டு 57 வயதான GUO ZONG YAO ஹுபெய் மாநிலத்தின் ஒரு கட்டிட திட்டப்பணி நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன், ஓய்வு பெறுவதற்கு 2 திங்கள் மட்டும் மிஞ்சிய போது, அவர் மலக்குடல் புற்று நோயால் பீடிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இத்தகைய நோய், அறுவை மற்றும் வேதியியல் சிகிச்சை மூலம்தான் கட்டுப்படுத்தப்பட முடியும். சிகிச்சை பெற வேண்டுமானால், மருத்துவ மனைக்கு 40 ஆயிரம் யுவானை அவர் அடமானத் தொகையாக கட்ட வேண்டும். ஆனால், அவரது குடும்ப வருமானம் அதிகமில்லை. அவ்வளவு தொகையை கட்ட முடியவில்லை. மேலும், அவர் சார்ந்த தொழில் நிறுவனம், ஹுபெய் மாநிலத்தில் இன்னல் மிகுந்த தொழில் நிறுவனமாகும். அதைச் சார்ந்திருந்து மருத்துவ சிகிச்சை கட்டணத்திலிருந்து ஒரு பகுதி பணம் திரும்பப் பெற முடியாது. இது பற்றி GUO ZONG YAO மிகவும் கவலைப்பட்டார். சிகி்ச்சையை கைவிடலாம் என்று அவர் எண்ணியிருந்தார்.

பின்னர், இன்னல் மிகுந்த நகர தொழிலாளர்களை, கடும் நோய்க்கான மருத்துவ சிகிச்சை காப்பீட்டில் சேர்த்து, மருத்துவ சிகிச்சை கட்டணத்தில் ஒரு பகுதி பணம் திரும்பப் பெறுவது தொடர்பான பிரச்சினையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய தயார் செய்துள்ளது என்று ஒருவர் GUO ZONG YAOவிடம் கூறினார். இதைக் கேட்ட அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

2006ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒரு நாள் காலை, அவரது முன்னாள் தொழில் நிறுவனத்தை சேர்ந்த சக பணியாளர் ஒருவர், வீதி விவகார அலுவலகத்தில் மருத்துவ சிகிச்சை கட்டணத்தில் பணம் திரும்பப் பெறுவதற்கான வங்கி அட்டையை எடுத்து வைப்பதாக அவரிடம் அறிவித்தார். மருத்துவ சிகிச்சை கட்டணம் தொடர்பான அவரது கவலை இறுதியில் நீங்கியது.

கொள்கைக்கிணங்க, உள்ளூர் அரசு மூலம் மருத்துவ சிகிச்சை கட்டணத்தில் 85 விழுக்காட்டு தொகையை அவர் திரும்பப் பெறலாம். அதே நாளில், அனைத்து செயல்முறைகளையும் GUO YAO XIANG தடையின்றி நிறைவேற்றி, பணம் சேமிக்கப்பட்டுள்ள வங்கி அட்டையைப் பெற்றார்.

2006ஆம் ஆண்டில், ஹுபெய் மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து, 7000க்கு அதிகமான இன்னல் மிகுந்த தொழிலாளர்களை மருத்துவ சிகிச்சை காப்பீட்டில் சேர்த்துள்ளது.

மருத்துவ சிகிச்சை காப்பீடு மூலம், உடல் நோய்க்கு சிகிச்சை பெறுவதில் முதியோர்களின் அடிப்படை தேவை நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களின் உள நலம் கவனிக்கத்தக்க பிரச்சினையாகும். உடல் மற்றும் உளவியல் காரணங்களால், செழிப்பான, ஆரோக்கியமான பொழுது போக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவது முதியோருக்கு தேவையாகியுள்ளது.

முதியோர்களின் அன்றாட வாழ்க்கையை செழிப்பாக்கும் வகையில், வூ ஹான் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகள் பலவற்றில், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவருக்கான பொழுது போக்கு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. முதியோர்கள் உடல் பயிற்சியிலும் கூட்டாண்மை நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ள இம்மையங்கள் அடிக்கடி ஏற்பாடு செய்கின்றன. 60 வயதுக்கு மேற்பட்ட ZHANG JUAN அம்மையார், வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், பொழுது போக்கு மையத்தில் பழைய சக பணியாளர்களுடன் உரையாடுகிறார் அல்லது உடல் பயிற்சி செய்கிறார்.

"வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின் இதர வேலையில் ஈடுபடவில்லை. உடல் பயிற்சி முதலிடத்தில் உள்ளது. தவிரவும், வீட்டு வேலையை செய்வது, குழந்தையை செவ்வனே பராமரிப்பது ஆகியவை என்னைப் பொறுத்த வரை முக்கிய கடமைகளாகும். தற்போது என் கணவரும் வேலையிலிருந்து ஓய்வு பெற்றார். எமது பிள்ளையும் வேலை வாய்ப்பு பெற்று, திருமணம் ஆகி விட்டார். எமது குடும்ப வாழ்க்கை நன்றாக உள்ளது" என்றார் ZHANG JUAN அம்மையார்.

முதியோர்களில் பலர் வேலையிலிருந்து ஓய்வு பெறும் முன், தங்களது தொழில் நிறுவனங்களில் முதுகெலும்பான பணியாளர்களாக இருந்தனர். தங்களது தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, மற்றவருக்கு உதவியளிக்க வேண்டும் என்று அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த முதியோர்களின் கோரிக்கையை நிறைவு செய்யும் வகையில், மருத்துவ மனைகளிலிருந்து ஓய்வு பெற்ற முதியோருக்கு குடியிருப்பு மருத்துவச் சிகிச்சை நிலையங்களில் பணிபுரிய ஊக்கமளிக்கும் கொள்கையை வூ ஹான் நகராட்சி 2006ஆம் ஆண்டில் வகுத்து செயல்படுத்தியது.