கடந்த சில ஆண்டுகளில், சீனாவின் திபெத் தன்னாட்சி பிரதேசத்தில் உழைப்பு மற்றும் சமூகக் காப்பீட்டு பணி, குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது. திபெத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சமூக காப்பீட்டு முறைமைக் கட்டுகோப்பு திபெத்தில் அடிப்படையில் உருவாகியுள்ளது. 7ம் நாள் திபெத்தில் நடைபெற்ற உழைப்பு மற்றும் சமூகக் காப்பீட்டு பணிக் கூட்டத்தில் இந்நிலைமை பற்றி அறிமுகப்படுத்தப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில், புதிய வேலை வாய்ப்பைப் பெற்றோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியது. நகரங்களில் வேலையற்றோர் விகிதம் 4.5விழுக்காட்டுக்கு கீழ் உள்ளது. மேலும், தொழிலாளர் ஒப்பந்த முறைமையை பன்முகங்களிலும் முன்னேற்றி, முதுமைக் கால காப்பீட்டு முறைமையை மேம்படுத்தி, அனைத்து மக்களின் மருத்துவ காப்பீட்டு பரவலை விரைவுபடுத்துவதில், திபெத் மாபெரும் முன்னேற்றம் பெற்றுள்ளது.
|