• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-10 14:34:03    
எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சிகிச்சையிலான ஒத்துழைப்பு(II)

cri

கலை........எய்ஸட், காச நோய் மற்றும் மலேரியா நோய்கள் மனித குலத்தின் உடல் நலத்தை அச்சுறுத்தியுள்ளன. உலகின் பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளன. சீனா வளர்கின்ற மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. இவற்றின் அச்சுறுத்தலுக்கு சீனாவும் ஆளாகியுள்ளது.

தமிழன்பன்.........உலக நிதியம் நிறுவப்பட்டது முதல் திரட்டப்பட்ட தொகை மிகவும் தேவைப்படும் நாடுகள் மற்றும் பிரதேசங்கள் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு வழங்க பாடுபடுகின்றது. அப்படிதானே?

கலை.......ஆமாம். சீனாவும் உலக நிதியமும் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளன. உலக நிதியத்தின் நிர்வாக தலைவர் கச்சாக்கின் இதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது.

தமிழன்பன்.........சீனா உலக நிதியத்தின் மிக பெரிய ஒத்துழைப்பு கூட்டாளிகளில் ஒன்றாகும். இத்துறைக்கு சீனா உலக நிதியம் மிக அதிகமான தொகை ஒதுக்கிவைத்த இரண்டாவது பெரிய நாடாகவும் திகழ்கின்றது. இவைகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிய 10 நிகழ்ச்சிகள் சீனாவின் 31 மாநிலங்கள், நகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்களில் பரவியுள்ளன. அதன் மொத்த தொகை 42 கோடியே 40 லட்சம் அமெரிக்க டாலரை எட்டியது.

கலை.......இது மிகவும் மகிழ்ச்சிதரும் செய்தி.

தமிழன்பன்.......ஆனால் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கி வைக்கப்பட்டதால் நல்ல செய்தி இல்லை எனக் கொள்ளலாமா?

கலை.......கண்டிப்பாக இல்லை. மனிதகுலத்திற்கான அச்சுறுத்தல் பிரச்சினையை எதிர்கொள்வதற்கு பண செலவு ஒரு அளவீடு இல்லை. அதனால் கிடைக்கும் பயன்பாடே பெரிது.

தமிழன்பன்........பொருளாதார ரீதியில் உதவி செய்வது தவிர, உருப்படியான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதா?

கலை.........உண்டு. எடுத்துக்காட்டாக சீனாவின் மத்திய பகுதியிலுள்ள 7 மாநிலங்களில் உலக நிதியம் ரத்தம் இரத்த பரிசோதனை எடுப்பது மற்றும் இரத்தத் தானம் செய்வது மூலம் எய்ட்ஸ் நோய் பரவலை தடுத்து சிகிச்சை அளிப்பது பற்றி பிரச்சாரம் செய்துள்ளது. போதைப் பொருளை உடம்பில் செலுத்தும் ஊசிகளை அகற்றுவது மெத்தடோன் மருந்து விநியோகிப்பது, காச நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பது, மலேரியா நோய் பரவுவதை தடுக்கும் வகையில் யூன்நான், ஹைநான் ஆகிய இரண்டு மாநிலங்களில் வாழ்கின்ற மக்களுக்கு கொசு வலைகளையும் பூச்சி தடுப்பு மருந்துகளையும் விநியோகிப்பது உள்ளிட்ட செயல்பாடுகள் உலக நிதியத்தால் நிறைவேற்றப்பட்டன.

தமிழன்பன்........உலக நிதியம் 136 நாடுகளுடன் ஒத்துழைப்புகளை மேற்கொண்டுள்ளது. நிதியத்தின் விதிகளுக்கு இணங்கள உதவி பயன் உள்ளதை நிரூபிக்கின்ற உதவி பெறுவோருக்கு நிதியம் தொடர்ந்து உதவி வழங்கலாம் என்று திரு கச்சாக்கின் தெரிவித்துள்ளார்.

கலை.......ஆமாம். சீனா 2004ம் ஆண்டில் முதலாவது முறையாக நிதி உதவி பெற்ற பின் உலக நிதியத்துடன் புதிய ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

தமிழன்பன்.........எய்ட்ஸ் நோய் உள்ளிட்ட நோய்களின் பரவலை தடுத்து சிகிச்சை அளிப்பதில் சீனா குறிப்பிட்ட சாதனைகளை பெற்றுள்ளதை உலக நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்பு நிகழ்ச்சிகள் நிரூப்பித்துள்ளன.

கலை.......இது பற்றி கச்சாக்கின் எப்படி மதிப்பிட்டுள்ளார். தெரியுமா? அவருடைய மதிப்பீட்டை கேளுங்கள்.

தமிழன்பன்.......சீனாவுடன் மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பு நிகழ்ச்சிகளை நாம் மிகவும் உயர்வாக மதிப்பிட்டுள்ளோம். சீனா பெற்றுள்ள சாதனைகள் குறிப்பிடத்தக்கவை. உலக நிதியம் மிக அதிகமாக முதலீடு செய்த நாடுகளில் சீனா ஒன்றாகும். அதேவேளையில் சாதனைகளை பெற்றுள்ள நாடுகளில் ஒன்றாகவும் சீனா திகழ்கின்றது.

கலை....... எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா நோய்களின் தடுப்பு மற்றும் சிகிச்சைத் துறையில் சீன அரசு மேற்கொண்ட முயற்சிகளை திரு கச்சாக்கின் உயர்வாக பாராட்டினார். அத்துடன் உலக நிதியம் சீன அரசுடன் இணைந்து ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழன்பன்.......... உலகில் எய்ட்ஸ் காச நோய் மற்றும் மலேரியா நோய்களின் பரவலை தடுக்க உலக நிதியமும் சீன அரசும் கூட்டு முயற்சி மூலம் தடுக்க பாடுபடுவது திண்ணம் என்று நம்புகின்றோம்.

கலை........ஆமாம் இவைகளின் ஒத்துழைப்பில் ஐயம் எதுவும் இல்லை.

தமிழன்பன்.........நேயர்களே. உலக நிதியமும் சீனாவும் ஒத்துழைப்பை மேற்கொள்வதன் மூலம் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மற்றும் தடுப்பு பற்றி கேட்டீர்கள்.

கலை.......கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை கேட்டு கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவியுங்கள்.

தமிழன்பன்.......அடுத்த சனிக்கிழமை மீண்டும் சந்திப்போம். வணக்கம்.

கலை........வணக்கம் நேயர்களே.