திபெத் மொழி பணிக்கான முதல் மென்பொருளை, சீனா வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது என்று சீனாவின் தொடர்புடைய வாரியம் இன்று ஷாங்ஹாய் மாநகரில் அறிவித்தது. இம்மென்பொருள், சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தகவல்மயமாக்க முன்னேற்றப்போக்கை விரைவுபடுத்தும்.
முன்ப், திபெத் மொழி பணிக்கான மென்பொருள் இல்லையாதலால், பெருமளவிலான திபெத் மொழி தகவல்கள், கணினியில் வெளியிடப்பட்டு, இணையத்தில் அனுப்பப்பட்ட முடியாத நிலை இப்பிரதேசத் தகவல் மயமாக்கத்தின் வளர்ச்சியை கடுமையாக தடை செய்தது.
கொரிய மங்கோலிய வய்வூர் ஆகிய இன மொழிகளிலான, சீன மென்பொருட்கள், தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்று சீன தகவல் தொழிற்துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|