• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-09 21:57:56    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் பொதுச் சுகாதார பாதுகாப்பு

cri

2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் போதான பொதுச் சுகாதார பாதுகாப்பை உத்தரவாதம் செய்யும் வகையில், உரிய நடவடிக்கைகளை சீனா வலுப்படுத்தும். இந்நடவடிக்கைகள், நோயைக் கட்டுப்படுத்துவது, சுகாதார கண்காணிப்பு, சுகாதார அவசர சிகிச்சை, மருத்துவ சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கும் என்று சீனச் சுகாதார அமைச்சர் chen zhu இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியும், பெய்ஜிங்கில் நடைபெறுவது, சீன பொதுச் சுகாதார வளர்ச்சிக்கான முக்கிய வாய்ப்பாகும். பெய்ஜிங் மாநகர் உள்ளிட்ட ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்தும் நகரங்களுக்கும், அவற்றுக்கு அருகிலுள்ள மாநிலங்களுக்குமிடையிலான கூட்டு கட்டுப்பட்டு செயல்பாட்டை சீனா வலுப்படுத்தும். வெளிநாடுகளில் பரவும் நோய் தகவலுக்கான கண்காணிப்பை வலுப்படுத்தி, பொதுச் சுகாதார ஆபத்தை சீனா பெருமளவில் தடுத்து, நீக்கும் என்று chen zhu கூறினார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீராக நடத்துவதை, இவ்வாண்டு பணியின் முக்கியமாக பெய்ஜிங் மாநகராட்சி கொள்ள வேண்டும். மிக சிறந்த எழுச்சி நிலையில், மிக உயர்வான பணி வரையறையின் படி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அரசு உத்தரவாரம் அளிக்கும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழு தலைவர் jia qing lin அண்மையில் வலியுறுத்தினார்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணியில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழிற்துறையின் கட்டமைப்பை பெய்ஜிங் அரசு மேம்படுத்த வேண்டும். நவீன சேவை துறையை வளர்த்து, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியை வலுப்படுத்தும். பெய்ஜிங்கின் கட்டுமானம், நிர்வாகம், சேவை ஆகிய நிலைகளை இடைவிடாமல் உயர்த்தி, தூய்மைக்கேடற்ற நிலை, தொழில் நுட்பம், மானுடவியல் என்ற ஒலிம்பிக் கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று jia qing lin சுட்டிக்காட்டினார்.

2008ம் ஆண்டு, சீனா மற்றும் உலக நாடுகளின் ஒலிம்பிக் ஆண்டாகும். தனிச்சிறப்பு மற்றும் உயர் நிலை வாய்ந்த ஒலிம்பிக் போட்டியையும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் பெய்சிங் நடத்த வேண்டும் என்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுத் தலைவர் liu qi நேற்று தெரிவித்தார்.
ஒலிம்பிக் போட்டிக்கான ஆயுத்த பணிகளுக்கு 6 ஆண்டு கால போக்கு உள்ளது. திட்டத்திற்கு இணங்க, 2007ஆம் ஆண்டுக்கான குறிக்கோள் நனவாக்கப்பட்டது. பொதுவாக, ஒலிம்பிக் திடல்கள் அரங்குகள் வசதியான கட்டுமானங்கள் ஆகியவை பற்றிய கடமைகள் நிறைவேறியுள்ளன.
2008ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிக்கான முழு ஆயத்தக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கான பிரச்சாரத்தை வலுப்படுத்தி, அமைதியான ஒலிம்பிக் போட்டியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று liu qi கூறினார்.