2004ம் ஆண்டு, திபெத்தின் Lhasa நகரம் முழுவதிலும், வெண்ணிற மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கை நடைபெற்ற பின், 2008ம் ஆண்டில், திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம், நகரம் முழுவதிலும் வெண்ணிற மாசுபாட்டைத் தடுக்கும் நடவடிக்கை பன்முகங்களிலும் மேற்கொள்ளும்.
நேற்று நடைபெற்ற திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிக் கூட்டத்திலிருந்து இத்தகவல் கிடைத்துள்ளது.
ப்ளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, துணி மற்றும் தாள் பைகளைப் பயன்படுத்துவது, முதலிய நடவடிக்கைகள், நல்ல பயன் தந்துள்ளன. இவ்வாண்டு, இத்தகைய நடவடிக்கைகள், தன்னாட்சிப் பிரதேசம் முழுவதிலும், பரவலாக்கப்படும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் தலைவர் Zhang Yongze கூறினார்.
|