• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-10 16:35:21    
Yan xi ஏரி

cri

Yan xi ஏரி, huai rou மாவட்ட நகரின் வடபகுதியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள yan சான் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கில், கம்பீரமான பத்தாயிரம் லீ நீளமுடைய பெருஞ் சுவரும், தெற்கில், கண்கொள்ளாத விரிவான வடசீனச் சமவெளியும் உள்ளன. இது, அழகான இயற்கை நீர் பூங்காவாகும். Yan xi ஏரியின் நீர் பரப்பு விரிவானது. அதன் நீர் பளிங்கு போல் மிகத் தெளிவாகக் காணப்படுகிறது. ஆண்டுத்தோறும், வசந்தகாலம் இலையுதிர்காலம் ஆகிய இரண்டு காலங்களில், பறவைகள் கூட்டம்கூட்டமாக, இந்த ஏரிக்கு ஓய்வெடுக்க வருகின்றன. அதனால், அந்த ஏரி, பறவை ஓய்வெடுக்கும் ஏரி என்ற பெயரைப் பெற்றது.


Yan xi ஏரியின் மூன்று பகுதிகளில் மலைகள் உள்ளன. இதன் வடக்கில், jun du மலை உள்ளது. அம்மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டராகும். இதன் மேற்கில், hong luo மலை உள்ளது. அம்மலை கடல் மட்டத்திலிருந்து 811 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் கிழக்கில், jin deng மலை உள்ளது. அம்மலை கடல் மட்டத்திலிருந்து 186 மீட்டர் உயரத்தில் உள்ளது.


இந்த ஏரிக்கு, ஒரு முறை பயணம் செய்தால், நகரத்தின் இரைச்சலிலிருந்து விலகி, மனதுக்கு இதமாக ஓய்வு அளிக்கலாம். சிற்றாறுகளில் சலசலத்து ஓடுகின்ற நீர் மற்றும் அமைதியான சோலைவனக் காட்சியை அரும் கலை அமைப்புகள் கொண்ட ஆலயங்கள் அவ்வப்போது மூடிமறைக்கின்றன.
பருவகால மாற்றங்களுடன், அந்த ஏரியின் காட்சிகளும் மாற்றமடைந்து ஆண்டு முழுவதும் பயணிகளை விடாது ஈர்த்து வருகின்றன.

இந்த ஏரியில், கேபிள் கார் பயணம், உயரமான இடத்திலிருந்து கயிற்றை காலில் கட்டிக்கொண்டு குதித்தல், செயற்கை பாறையில் ஏறுவது, கிளைடர் எனப்படும் மிதவை வானூர்தி பயணம், ஊஞ்சலாடுவது போன்ற பொழுது போக்கு வசதிகளை அனுபவித்து மகிழலாம்.


பொதுவாக, Yan xi ஏரி, ஒரு கண்கொள்ளாக் காட்சி என்றே கூறப்படுகின்றது.