• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-10 14:41:21    
கோடீஸ்வரர்கள்

cri

பொதுவாக குழந்தை பிறந்தால் அதற்கு பெயர் வைக்க பெற்றோர் மிக சிரத்தையோடு தேடலில் இறங்குவதை நாம் பார்த்திருப்போம். பெயர்கள் வினோதமானதாக, அழகானதாக, பொருள் பொதிந்ததாக இருக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்தப்படுவதுண்டு. ஒரு சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்கள், நட்சத்திரங்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டுவதுண்டு. அந்த வகையில் வித்தியாசமான பெயராக புத்தாண்டு நாள் என்ற பெயரை கொண்ட சீனர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 659 எனும்போது நமக்கு ஆச்சரியத்தில் வாய் பிளக்கிறது. பெயரே புத்தாண்டு நாளா என்று கேட்பவர்களுக்கு கூடுதலாக இன்னொரு தகவல். சீனாவில் புத்தாண்டு நாளை பிறந்த நாளாக கொண்டவர்களின் எண்ணிக்கை 55 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல். சீன மொழியில் புத்தாண்டு நாள் என்பது யுவான் தான் எனப்படுகிறது. யுவான் தான் என்ற பெயர் கொண்டவர்களான இந்த 5659 பேரில் 1735 பேரின் பிறந்த நாளும், புத்தாண்டு நாளே. இது தவிர குடும்பப் பெயராக யுவான், சூட்டப்பட்ட பெயராக தான் ஆக யுவான் தான் என்ற முழுப்பெயரை கொண்டவர்களின் எண்ணிக்கை 618. யுவான் தான் என்ற வார்த்தை சீனாவில் ஏறக்குறைய 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பொதுவாக சீன சந்திர நாட்காட்டியின் படியான ஆண்டின் துவக்கமே சீனர்களுக்கு புத்தாண்டு நாள் யுவான் தான் என்றாலும், 1949ம் ஆண்டு ஆங்கில நாட்காட்டியின் முதல் நாளான ஜனவரி முதல் நாளையே யுவான் தான் என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கத் தொடங்கியது.

கோடீஸ்வரர்கள்

பல பத்து இலட்சங்களில் புரளும் செல்வந்தர்களை மில்லியனர்கள் என்றும், இலட்சக்கணக்கான கோடிகளில் புரளும் பெரும் பணக்காரர்களை பில்லியனர்கள் என்றும் ஆங்கிலத்தில் அழைகின்றனர்.

பொதுவில் இலட்சாதிபதிகள், கோடீஸ்வரர்கள் என்றும் அழைக்கலாம். தற்போது பெரும் பணக்காரர்களை அதிகம் கொண்ட நாடு எது என்றால் அமெரிக்கா என்று அனைவருமே சொல்லிவிடுவர். அமெரிக்காவுக்கு அடுத்ததாய் அதிக பெரும் பணக்காரர்கள் அல்லது கோடீஸ்வரர்களை கொண்ட நாடு எது என்று தெரியுமா. சீனாதான். அண்மையில் வெளியான சில புள்ளி விபரங்களின் படி 2007ம் ஆண்டில் சீனாவின் முதல் 500 பெரும் புள்ளிகளின் பட்டியலில் 1 இலட்சம் கோடிக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் 146 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 500 பேரின் மொத்த சொத்து மதிப்பு 4 ஆயிரத்து 342.6 பில்லியன். அதாவது 43 கோடியே 42 இலட்சத்து 60 ஆயிரம் கோடி. சீனப் பெருநிலப்பகுதி, தைவான், ஹாங்காங், மக்காவ் என சீன முழுவதிலுமிருந்தான இந்த 500 பெரும் புள்ளிகளின் பட்டியலை உலகத் தொழில் முனைவோர் என்ற இதழ் திரட்டி வெளியிட்டது. 100 மில்லியன் யுவானுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சீனர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்துக்கும் மேல். 10 மில்லியன் யுவானுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டவர்கள் 4 இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல். ஆக மில்லியனர்கள் எனப்படும் இலட்சாதிபதிகளின் எண்ணிக்கை சீன மக்கள் தொகையில் 3.3 விழுக்காடு என்று அறியப்படுகிறது.

சீன விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் சாதனை

2007ம் ஆண்டில் மட்டும் சீன விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மொத்தம் 123 உலக சாம்பியன் பட்டங்களையும், உலகக் கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளனர். 22 வகை விளையாட்டுகளில் இந்த சாதனை அளவு வெற்றிகளை குவித்ததோடு 10 உலக சாதனைகளையும் தகர்த்து, புதிய உலக சாதனைகளை உருவாக்கியுள்ளனர் சீன விளையாட்டுத் துறையினர்.

இதில் பளுத்தூக்கும் விளையாட்டில் 33 சாம்பியன் பட்டங்களும், வூஷூ எனும் போர்க்கலையில் 18 பட்டங்களும் வெல்லப்பட்டன. மேசைப் பந்து விளையாட்டிலும், நீர் குதிப்பு போட்டியிலும் தலா ஒன்பது பட்டங்கள், ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் 8 பட்டங்கள், பூப்பந்து விளையாட்டில் 4 பட்டங்களும் வென்றெடுக்கப்பட்டன.

ஓராண்டு கால குப்பை

சுத்தமே சுகாதாரம். சுத்தமாக இருந்தால் தொற்று நோய்கள் ஏதும் பரவாது நம்மை காத்துக்கொள்ள முடியும். இந்த சுத்தம் அல்லது தூய்மை என்பது தனி நபரிலிருந்து தொடங்கியே குடும்பம், வீடு, வீதி, சமூகம் என்று விரிவாகும். இதை உணர்த்தத்தானோ என்னவோ அமெரிக்காவை சேர்ந்த ஆரி டெர்பெல் என்ற நபர் கடந்த ஓராண்டு காலத்தில் தன்னால் உருவான குப்பை அனைத்தையும் ஒன்றாக கொட்டி சேர்த்து வைத்துள்ளார். தனி ஒரு மனிதன் எவ்வளவு குப்பை கூளங்களை ஓராண்டில் கொட்டுகிறான் என்பதை அறிவதே இவரது நோக்கமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு அவர் குப்பைகளை சேர்க்கத் தொடங்கி 12 வது மாதத்தில் நுழைந்துள்ள நிலையில் இந்த முயற்சி ஒரு சுற்றுச்சூழல் சார் நடவடிக்கையாகவே மாறிவிட்டது எனலாம். இவர் இதுவரை சேர்த்த குப்பைகளின் அளவு 96 கண சதுர அடி. தயாரானது ஓரிடம், விற்பனைக்காய் வைக்கப்பட்டது ஓரிடம், வந்து சேர்ந்தது ஓரிடம், பயன்படுத்தப்பட்டு குப்பையானது ஓரிடம் என ஒவ்வொரு பொருளுக்கும் பல நிலைகள் உள்ளன. இதில் குப்பைத்தொட்டி ஒரு நிலை மட்டுமே.

இலட்சாதிபதிகளான நாய்கள்

பணத்தை தண்ணீராய் இறைக்கிறான் என்று வகைதொகையில்லாமல் செலவழிப்போரை சொல்வார்கள். நாய் விற்ற காசு குரைக்காது என்று சொல்லக் கேட்டிருப்போம். நாய் பட்ட பாடு என்றும் கடினமாக போராடி அல்லல்படுவதை சொல்வார்கள்.

நாய் விற்ற காசை விடுவோம், நாயை வாங்கிய ஒருவரது காசு, அந்த நாய்களை இலட்சாதிபதியாக்கி இருக்கிறதாம். எங்கே என்று கேட்கிறீர்களா அமெரிக்காவில்தான். அமெரிக்காவில் மேரிலாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு இறந்த ஒரு நபர் தனது சொந்த வீட்டையும், தனது சேமிப்பையும் தான் வளர்த்த மூன்று நாய்களுக்கு எழுதி வைத்ததால் அவை இன்று இலட்சாதிபதிகளாகியுள்ளன. கென் கெம்பர் என்ற நபர் 4 இலட்சம் டாலர் மதிப்புள்ள தனது வீட்டையும், 4 இலட்சம் டாலர் சேமிப்பையும் தனது செல்ல நாய்களுக்கு எழுதி வைத்து பொறுப்பான ஒரு நபரிடம் ஒப்படைத்து கண் மூடியிருக்கிறார். தற்போது இவற்றுக்கான உணவுக்கும்ம், பராமரிப்புக்கும் ஆகும் செலவே இவற்றை செல்வந்த நாய்கள் என்பதை காட்டுகின்றன. இந்த மூன்றில் ஒரு நாய் அண்மையில் கார் ஒன்றில் அடிபட்டு எலும்பு முறிந்து போக, 6 ஆயிரம் டாலர் செலவழித்து சிகிச்சை அளிக்கப்பட்டதாம். நாய் பட்ட பாடு என்று சொல்வது நிச்சயம் இந்த மூன்று நாய்களுக்கு பொருந்தாது, அப்படித்தானே.