லீ இன மக்கள், முக்கியமாக சீனாவின் ஹாய்நான் தீவின் Tongshi, Baoting, Ledong, dongfang. Qiongzhong முதலிய இடங்களில் கூடி வாழ்கின்றனர். இவ்வினத்தின் மொத்த மக்கள் தொகை, 11இலட்சத்து 10ஆயிரத்து எண்ணூறு ஆகும். பதிவேட்டின் அடிப்படையைப் பார்த்தால், நான்கைந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான், லீ இனத்தின் மூதாதையர்கள் ஹாய்நான் தீவில் வாழ்ந்து, அத்தீவின் மிக முன்னதான குடிமக்களாக விளங்கினர்க என்று தெரிகிறது. லீ இனம் என்ற பெயர் தாங் வம்சக் காலத்தின் இறுதி முதல் பயன்படுத்தப்படத் தொடங்கியது.

லீ இன மக்களுக்கு சொந்த மொழி உண்டு. லி மொழி, சீன-திபெத் மொழிக் குடும்பத்தின் சவாங்-துங் கிளையைச் சேர்ந்தது. அவர்கள் நீண்ட காலமாக ஹான் இனமக்களுடன் பழகி கொண்டு வருவதால், அவர்களில் பலர், சீன மொழி பேச முடியும். முன்பு, இவ்வினத்தோர் இடையில், மூதாதையார் மற்றும் இயற்கை வழிபாடு பிரபலமாக இருந்தது. தற்போது, அவர்களில் சிலர் கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளனர். லீ இன மக்கள் முக்கியமாக வேளாண்துறையில் ஈடுபடுகின்றனர். துணையாக, கைவினைத் தொழிலிலும், வளர்ப்புத் தொழிலிலும், வணிகத்திலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் வசிக்கின்ற பிரதேசத்தில், கடலோர மீன்பிடிப்பு மற்றும் உப்புத் தொழிலுக்கான மூல வளம் செழிப்பாக இருக்கின்றது. தவிரவும் சீனாவின் முக்கியாமான ரப்பர் உற்பத்தித் தளமாக இப்பிரதேசம் விளங்குகின்றது. லீ இன மக்களின் பாரம்பரிய உறைவிடங்கள், கப்பல் வடிவத்தில் காணப்படும்.

லீ இன மக்களுக்கு முன்னால், அவரது மூதாதையாரின் பெயரை குறிப்பிடக் கூடாது. சில பகுதிகளில் பூனை கொல்வதும், உண்பதும், தடை செய்யப்படுகின்றன. மூங்கில்சோறு என்பது லீ இன மக்களின் பாரம்பரிய உணவுப்பொருளாகும். லீ இனத்தின் பெரும்பாலான விழாக்களும் ஹான் இனத்தின் விழாக்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. வசந்த விழா, 3வது திங்களின் 3ம் நாள் திருவிழா முதலியவை லீ இனத்தின் பாரம்பரிய விழாக்களாகும்.

சந்திர நாட் காட்டியின்படி 3வது திங்களின் 3ம் நாள் திருவிழாவில், முதியவர்களை மதிக்கும் நல்ல பண்புடைய லீ இன மக்கள், வீட்டில் தயாரித்த ஊறுகாயையும், அரிசியாலான மதுவையும், சிற்றுண்டிகளையும் எடுத்துக்கொண்டு, ஊரிலுள்ள மதிப்புடைய முதியவர்களைப் பார்க்கச் செல்கின்றனர். இரவு வந்ததும், இளைஞர்கள் லீ இன நடனம் ஆடுகின்றனர்.
|