• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-11 21:14:58    
Li naவின் சாம்பியன் பட்டம்

cri

5ம் நாள், ஆஸ்திரேலிய தங்கக் கடற்கரை என்னும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில் சீன வீராங்கனை li na 2-1 என்ற ஆட்ட கணக்கில் பெலோ ரஷிய வீராங்கனை Azarenkaவை தோற்கடித்து, தங்கப் பதக்கத்தை பெற்றார்.

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை சீராக நடத்துவதை, இவ்வாண்டு பணியின் முக்கியமாக பெய்ஜிங் மாநகராட்சி கொள்ள வேண்டும். மிக சிறந்த எழுச்சி நிலையில், மிக உயர்வான பணி வரையறையின் படி, ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவதற்கு அரசு உத்தரவாரம் அளிக்கும் என்று சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய குழு தலைவர் jia qing lin அண்மையில் வலியுறுத்தினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணியில் சீன அரசு கவனம் செலுத்தி வருகிறது. தொழிற்துறையின் கட்டமைப்பை பெய்ஜிங் அரசு மேம்படுத்த வேண்டும். நவீன சேவை துறையை வளர்த்து, எரியாற்றலைச் சிக்கனப்படுத்தி பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் பணியை வலுப்படுத்தும். பெய்ஜிங்கின் கட்டுமானம், நிர்வாகம், சேவை ஆகிய நிலைகளை இடைவிடாமல் உயர்த்தி, தூய்மைக்கேடற்ற நிலை, தொழில் நுட்பம், மானுடவியல் என்ற ஒலிம்பிக் கருத்துகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று jia qing lin சுட்டிக்காட்டினார்.

ஒலிம்பியா நகரம், மரம் நடும் பணியை திட்டப்படி நிறைவேற்றும். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான புனிதத் தீபத்தை திரட்டும் பணி தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கென பண்டைக்கால ஒலிம்பியா சிதிலத்துக்கு அருகில் தீயில் நாசமாக்கப்பட்ட மரத்தை இந்நகரம் தன்னால் இயன்றதனைத்தையும் செய்து புதுப்பிக்கும். கிரேக்க ஒலிம்பியா நகராட்சித் தலைவர் GIORGOS AIDONIS, உள்ளூர் நேரப்படி ஜனவரி திங்கள் 6ம் நாள், சோதனைப் பயணம் மேற்கொண்ட கிரேக்கத்திலுள்ள சீனத் தூதர் luolinquan இடம் இவ்வாறு அறிமுகப்படுத்தினார்.கடந்த ஆகஸ்டு திங்கள் ஒலிம்பியா நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, சீனத் தூதர் luolinquan மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார். புனிதத் தீயைத் திரட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு குறித்து, அவர் ஒலிம்பியா நகராட்சித் தலைவர் GIORGOS AIDONISயுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். பெய்ஜிங் ஒலிம்பிக விளையாட்டுப் புனிதத் தீபத்தை திரட்டும் விழா, 2008ம் ஆண்டு மார்ச் திங்கள் 24ம் நாள் வழமைக்கிணங்க பண்டைக்கால ஒலிம்பிக் சிதிலத்தில் நடைபெறும்.