• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-14 10:17:59    
தேசிய நாடக பெரு அரங்கம்

cri

சில ஆண்டுகளில் கட்டியமைக்கப்பட்ட, சீனாவில் 21ம் நூற்றாண்டின் அடையாளம் வாய்ந்த தேசிய நாடக பெரு அரங்கம் 2007ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22ம் நாள் அதிகாரப்பூர்வமாக பொது மக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது. சீன மற்றும் வெளிநாட்டில் புகழ்பெற்ற இசையுடன், 3 திங்கள் நீடிக்கும் சர்வதேச அரங்கேற்ற காலமும் தொடங்கியது. சீன மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு வட்டாரங்கள், தேசிய நாடக பெரு அரங்கத்தின் திறப்பை ஆரவாரமாக வரவேற்றன.

டிசம்பர் திங்கள் 22ம் நாள் இரவு, பெய்ஜிங் மாநகரத்தின் மையப் பகுதியிலுள்ள தியென் ஆன் மன் சதுக்கத்தின் மேற்கில் தேசிய நாடக பெரு அரங்கம் சிறப்பாக அலிங்கரிக்கப்பட்டிருந்தது. முட்டை வடிவிலான இவ்வரங்கம், செயற்கை ஏரியால் சுற்றி வளைக்கப்படுகிறது. அதன் வளாகத்தில் பலப்பல விளக்குக்கள் பொருத்தப்பட்டன. இரவு நேரத்தில், இவ்விளக்குகள் நட்சத்திரங்களாய் போல காணப்படுகின்றன.

3 திங்கள் காலத்தில், சீன மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் இங்கு 180 கலை நிகழ்ச்சிக்களை அரங்கேற்கவுள்ளனர். இதில் டிசம்பர் திங்கள் 22ம் நாள் முதல் 24ம் நாள் வரை துவக்க விழாவில் நடைபெற்ற மூன்று இசை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. உலகில் புகழ் பெற்ற தலைசிறந்த சீன இசை கலைஞர்கள் இந்நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர். இந்நாடக பெரு அரங்கம் பொது மக்களுக்குத் திறக்கப்படுவது சீனக் கலைஞர்களின் கனவாகும். சீனத் தேசிய நாடக பெரு அரங்கத்தை கட்டியமைக்கும் எண்ணம், 50 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. நீண்டகாலமாக, இது சீனக் கலைஞர்களின் ஆவலாக இருந்து வந்தது. இந்நாடக அரங்கு கட்டியமைக்கப்பட்ட பின் சீன தேசத்தின் பண்பாட்டையும், கலை லட்சியத்தையும் முன்னேற்றுவதில் பெரும் பங்கு ஆற்றும். இது மக்களின் பொது விருப்பமாகும். சீன அரங்கேற்றக் கலையின் புதிய வளர்ச்சி நிலைகளை வெளிக்காட்டும் வகையில், தலைசிறந்த சீனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சீனத் தேசிய நாடக பெரு அரங்கின் தலைமை கலைஞர் chenzuohuang கூறினார்.

நண்பர்களே, தேசிய நாடக பெரு அரங்கு என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.