• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-14 14:24:52    
சான்துங் மாநிலத்தின் பொருளாதாரச் சீர்திருத்தம் II

cri

சீனாவின் கிழக்குப் பகுதியிலுள்ள Shandong மாநிலம், கடந்த சில ஆண்டுகளில், பொருளாதாரச் சீர்திருத்த வேகத்தை விரைவுபடுத்தி வருகிறது. அதிக எரியாற்றல் செலவு வாய்ந்த துறைகளைப் பெரிதும் சரிப்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறது. எரியாற்றலை அதிகமாகச் செலவு செய்து, சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பல சிறிய தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அத்துடன், சுற்றுச் சூழல் பாதுகாப்புத் தொழில் துறைகளை ஆக்கப்பூர்வமாக வளர்க்கப்பட்டு வருகின்றன. பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியை இம்மாநிலம் முன்னேற்றியுள்ளது. இனி, எமது செய்தியாளர் tangyuangui Shandong மாநிலத்திலிருந்து அனுப்பிய விபரமான செய்தி அறிக்கையைக் கேளுங்கள்:

ஒரு பெரும் வெடியோசையுடன், Shandong மாநில zaozhuang நகரத்தின் ஒரு சிறிய காரை உற்பத்தித் தொழிற்சாலை அழிக்கப்பட்டது. அத்துடன், சிறிய அனல் மின் சார நிலையங்களை மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலைக் கடுமையாக மாசுபடுத்திய, அதிக எரியாற்றல் செலவு வாய்ந்த பல சிறிய மின்னாக்கி அமைப்புகள், இவ்வெடியோசையோடு இடிந்து வீழ்ந்தன. இத்தகைய சிறிய தொழில் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவது, Shandong மாநிலத் தொழில் துறையின் கட்டமைப்புகளைச் சரிப்படுத்தும் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று Shandong மாநிலச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் xugang தெரிவித்தார். அவர் கூறியதாவது:

பொருளாதாரச் சமூகத்தின் வளர்ச்சியில், இந்த சிறிய தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் பங்கு எடுத்துள்ளன. ஆனால், பொருளாதாரச் சமூகம் மென்மேலும் வளர்ந்து வருவதோடு, இத்தகைய தொழில் நிறுவனங்களால் ஏற்படும் மாசுபாடு, அவை ஆற்றிய பங்கை விட அதிகம். இதனால்தான், நாம் இத்தொழில் நிறுவனங்களை முதலில் மூடினோம் என்றார் அவர்.

கடந்த சில ஆண்டுகளாக, Shandong மாநிலம் பல்வகை நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரச் சீர்திருத்த வேகத்தை முன்னேற்றி வருகிறது. மாசுபாடு அதிகமாக உள்ள இத்தகைய தொழில் நிறுவனங்களைக் கட்டுப்படுத்துவதோடு, தூய்மையான அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்புத் திட்டப்பணிகளை, Shandong மாநிலம் பெரிதும் ஆதரிக்கின்றது. எடுத்துக்காட்டாக, சிறிய அனல் மின் சார நிலையங்களை மூடிய பின், காற்று விசையால் இயக்கப்படும் மின்னாக்கி உள்ளிட்ட தூய்மையான எரியாற்றலையும் Shandong மாநிலம் ஆக்கப்பூர்வமாக வளர்த்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதுடன், உள்ளுர் பொருளாதாரத்தின் தொடரவல்ல வளர்ச்சியையும் மேம்படுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வரையறையை இம்மாநிலம் உயர்த்தியுள்ளது. அதிகமான மாசுபாடு ஏற்படும் திட்டப்பணிகளை உறுதியாக நிறுத்தியுள்ளது. Shandong மாநிலத்தின் வெளிநாட்டு வர்த்தகப் பொருளாதார ஒத்துழைப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் mengjianxin கூறியதாவது:

தற்போது, புகுத்தப்பட்டுள்ள எல்லா முக்கிய திட்டப்பணிகளும், சுற்றுச் சூழல் மதிப்பீட்டினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இச்செயல், Shandong மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு நலன் தரும் என்றார் அவர்.

Shandong மாநிலத்தின் qingdao நகரைச் சேர்ந்த wenquan 2003ம் ஆண்டு முதல், சீன-ஜெர்மன் கூட்டு முதலீட்டு காற்று ஆற்றல் மின் சார உற்பத்தி ஆலை நிறுவப்பட்டது. ஆண்டுதோறும், ஏறக்குறைய 10 ஆயிரம் டன் நிலக்கிரி சிக்கனப்படுத்தப்படலாம். உள்ளுர் பிரதேசத்தின் சுற்றுச் சூழல் மாசுபாடு பெரிதும் குறைக்கப்பட்டது. Wenquan ஊராட்சி வணிகர்களை வரவழைத்து, முதலீட்டை உட்புகுத்துவதில் கண்டிப்பான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்று இந்நகராட்தியின் பொறுப்பாளர் liruihong அம்மையார் அறிமுகப்படுத்தினார். அவர் கூறியதாவது:

மாசுபாடு ஏற்படும் சில தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் தொழில் நிறுவனங்களைப் பொறுத்து, முதலீடு எவ்வளவு அதிகமாக செய்தாலும், நாம் இத்தொழில் நிறுவனங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் திட்டப்பணிகளுக்கு, கொள்கை ரீதியில் முன்னுரிமையை நாம் வழங்குவோம். தற்போது, நிலம் குறைவாக உள்ள நிலைமையில், காற்று ஆற்றல் மின் சார உற்பத்தி ஆலைகளை நாம் புகுத்தியுள்ளோம். இது பெரும் மதிப்பு வாய்ந்தது என்றார் அவர்.

1 2