• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-15 10:49:39    
துயிலும் புத்தர் கோயில்

cri

துயிலும் புத்தர் கோயில், சீனாவின் பெய்ஜிங் மாநகரின் மேற்கு மலையின் வட பகுதியிலுள்ள ஷோ நியூ மலையின் தென் பகுதியிலும், சுகந்த மலையின் கிழக்குப் பகுதியிலும் இருக்கிறது. இது, பெய்ஜிங் நகரப் மையத்திலிருந்து 50 கிலோமீட்டர் தூரம் உடையது.

முன்பு, இக்கோயில், தோ லியு கோயில் எனவும் ஷோ ஆன் கோயில் எனவும் அழைக்கப்பட்டது. 1734ம் ஆண்டு, சீரமைக்கப்பட்ட பின், இது, ப்பூ சியுவே கோயில் என்ற பெயரைப் பயன்படுத்தத் துவங்கியது. தாங் வம்சக்காலத்தில், அங்கு, கோயிலுக்குள் சந்தண மரத்தால் செதுக்கப்பட்ட துயிலும் புத்தர் சிலை வைக்கப்பட்டது. பின்னர், யுவான் வம்சக்காலத்தில், அங்கு ஒரு பெரிய சாக்யாமுனி வெண்கலச் சிலையும் கட்டியமைக்கப்பட்டது. அதனால், இக்கோயில், துயிலும் புத்தர் கோயில் என அழைக்கப்பட்டது.

யுவான் வம்சக்காலத்தின் வரலாற்றுப் பதிவேட்டின்படி, அப்போது, வெண்கலச் சிலை வருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட செம்பு, 50 கிலோகிராம் ஆகும். சுமார் 7 ஆயிரம் பேர், இதில் கலந்து கொண்டனர். இச்சிலையின் நீளம், 5 மீட்டராகும். துயிலும் மாதிரியாகக் காணப்படுகிறது. சிவப்பு படுக்கையில் படுத்திருக்கும் இப்புத்தரின் ஒரு கை, தலையைத் தாங்கியது. மறு கை, உடல் மேல் வைக்கப்பட்டது. வண்ண முலாம் பூசப்பட்ட புத்தரின் 12 சீடர்கள், அவரைச் சுற்றி மரத்தின் கீழ் நின்ற வண்ணம், அவரது நோயை கவனித்தனர்.

இந்த பெரிய சிலையிலிருந்து, பழைய காலங்களில் வார்ப்புத் தொழில் நுட்பம், எந்த நிலையில் இருந்தது என்பதை ஒருவாறு ஊகிக்க முடியும்.

தவிர, கோயிலில், சில அரச மரங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும், வசந்த காலத்தின் இறுதியிலும், கோடைகாலத்தின் துவக்கத்திலும், வெள்ளை பூக்கள் மலர்கின்றன. இப்பூக்கள், சிறிய வெள்ளை மணிகல் கோபுரங்களில் தொங்கவிடும் இலைகளைப் போன்று, மிகச் சிறப்பாக காணப்படுகின்றன.

இப்புத்தர் கோயிலுக்குப் பின்னே, சுமார் 500 மீட்டர் தூரத்தில், இளம் இணைகள் ஒதுங்கிக் கொள்ளும் ஓர் அமைதி மூலையாக, செரி பள்ளத்தாக்கு இருக்கிறது. இந்த இனிமையான இடத்தை, அருவிகள் ஓடும் பசு மரக் கூடலும் மூங்கில் தோப்புகளும் அழகு செய்கின்றன. பாறை வெடிப்புகளிலிருந்து பாயும் பளிங்கு போன்ற ஊற்றுகள், குளுமையும் உற்சாகமும் ஊட்டுகின்றன.