• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-15 15:17:47    
நிகழ்ச்சி பற்றிய நேயர்களின் கருத்துக்கள்

cri
கலை: வணக்கம் நேயர்களே, மீண்டும் உங்கள் அனைவரையும் நேயர் நேரம் நிகழ்ச்சியில் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்வதாக அறிகிறோம். பெய்சிங்கில் கூட குளிர் ஆரம்பமாகிவிட்டது. மழையோ, வெயிலோ, குளிரோ, எக்காலத்திலும் சீன வானொலியை தவறாமல் செவிமடுத்து, கடிதங்கள் மின்னஞ்சல்கள் வழியே கருத்துக்களை எழுதி எங்களுக்கு ஊக்கமூட்டி வரும் உங்கள் அனைவருக்கும் இந்த வேளையில் நன்றி கூறுகிறோம்.

க்ளீட்டஸ்: இன்றைய நிகழ்ச்சியின் முதல் கடிதம், காங்கேயம் பி. நந்தகுமார் எழுதியது. பெய்சிங்கில் நடைபெற்ற கண்காட்சி பற்றிய பல்கலைக்கழக் மாணவர்களின் கருத்து என்னும் செய்தித்தொகுப்பு நிகழ்ச்சி கெட்டேன். ஹாங்காங் தாய்நாட்டுக்கு திரும்பிய 10வது ஆண்டு பற்றிய சாதனை கண்காட்சி, உள்நாட்டு அமைப்பு முறை என்ற கோட்பாடு ஹாங்காங்கில் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதை பல உண்மைகள் மூலம் எடுத்துக்காட்டியுள்ளது. நிதானத்தையும், செழுமையையும் ஹாங்காங் இந்த 10 ஆண்டுகளில் நிலைநிறுத்தி சீனாவில் இதர பிரதேசங்களிலான தொடர்பை நெருக்கமாக்கியுள்ளது. இதை பல்கலைக்கழக மாணவர்கள் அளித்த பேட்டியில் குறிப்பிட்டனர். மேற்படிப்புக்காக பல மாணவர்கள் ஹாங்காங் செல்வதும் அந்த நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது.

கலை: அடுத்து மக்கள் சீனம் நிகழ்ச்சி பற்றி தேவனூர் ப. ஜோதிலட்சுமி எழுதிய கடிதம். வாகனத்துறையில் சீனா எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை பற்ரி மக்கள் சீனம் நிகழ்ச்சியில் அறிந்துகொள்ள முடிந்தது. வாகனத்துறையில் வெளிநாட்டு ஏற்றுமதியை அதிக அளவில் உயர்த்த சீனா எந்த அளவு பாடுபடுகிறது என்பதை, வாகனக்களின் உதிர் பாகங்களை தயாரிப்பதில் சீனா காட்டும் முக்கியத்துவத்திலேயே உணர முட்கிறது. வாகனத்துறையில் வெற்றி நடைபோடும் சீனா வெளிநாட்டு வர்த்தகத் தொடர்பை மேலும் அதிகரித்தால் இத்துறையில் இன்னும் பல சாதனைகள் படைக்கலாம்.

க்ளீட்டஸ்: தொஅடர்ந்து காத்தான்குடி எம். ஜி. எம். அசிர் எழுதிய கடிதம். சீன வானொலி நிகழ்ச்சிகளை நாங்கள் தவறாது கேட்டு வருகிறோம். நிகழ்ச்சிகள் கேட்பதற்கு இனிமையாகவுள்ளன. குடும்பத்துடன் நாங்கள் செவிமட்டுக்கும் சீன வான்லியில் நேயராக நானும் இணைய விரும்புகிறேன். உங்கள் வானொலிச்சேவை மென்மேலும் நன்கு வளரவேன்டும் என்று வாழ்த்துகிறேன்.

கலை: நன்றி அச்சீர் உங்களை சீன வானொலி அன்புடன் வரவேற்கிறது.

தொடர்ந்து சீன மகளிர் நிகழ்ச்சி பற்றி நந்தியாலம் டி. தணிக்காசலம் எழுதிய கடிதம். 40 வயதுக்கு மேற்பட்ட சாய் சௌ சியூ என்ற பெமணி தனது கிராமத்தில் அனைத்து வீட்டு சுவர்களிலும் ஓவியம் வரைந்துள்ளது பற்றி அறிந்தோம். தனது தாத்தாவில் வளர்ந்த அவர் தனது சிறு வயது கனவு வீடுச்சுவர்களில் வரைந்த ஓவியங்களாய் நனவாக மாறியது என்றும் அறிந்தோம். பறவைகள், விலங்குகள் என பல் அஓவியங்களை வரைந்ததோடு தனது கலை மற்றவர்க்கும் அவர் கற்ருக்கொடுக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.

க்ளீட்டஸ்: அதே நிகழ்ச்சி குறித்து தென்பொன்முடி தெ. நா. மணிகண்டன் எழுதிய கடிதம். கிராமப்புறத்தில் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டு, பின் அதையே தன் வாழ்நாள் பணியாக செய்துவரும் அம்மையார் பற்றி கேட்டோம். ஓவியங்கள்தான் ஒவ்வொரு இன, மத அம்சங்களை வெளிப்படுத்த உகந்த ஊடகமாகும். இத்தகைய ஊடகத்தை சிறந்த முரையில் காயாளத் தெரிந்த ஓவியரே சிறந்த ஓவியர். அந்த வகையில் சாய் சௌ சியூ அம்மையார் சீனக் கிராமப்புற மக்களின் மனநிலைகளை வெளிப்படுத்தும் வண்ணம் ஓவியங்களை தீட்டுவது பாராட்டப்படவேன்டிய செயலாகும்.

கலை: அடுத்து எம். ஏ. எஃப். சஸ்னா எழுதிய கவிதை ஒன்று உங்களுக்காக.

கவிதைக்கு கவி சொல்லும் கவிதை நீ உன் உறவை நாடுகின்ற பறவை நான் ராத்திரியில் பூத்திருக்கும் நிலவு நீ அல்லியாய் காத்திருக்கும் உறவு நான் நந்தவனக் குயில் நீ உன் இசையில் ஆடுகின்ற மயில் நான் மலர்வனத்தில் இதழ்விரிக்கும் பூ நீ மலரினையே சுமந்து நிற்கும் பா நான் வார்த்தைகளை விழியில் வைத்த கோதை நீ விழியினிலே மொழிகள் கண்ட மேதை நான் என் கவியில் வாழுகின்ற கரு நீ உனையே நினைத்திருக்கும் உரு நான்
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை மட்டக்களப்பு எம். எஸ். சஜீத் எழுதிய கடிதம். சீன வானொலியில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நான் தினமும் கேட்டு வருகிறேன். உங்கள் நிகழ்ச்சிகளை கேட்ட பிறகே நான் மற்ற வேலைகளை கவனிப்பேன். நிகழ்ச்சிகள் சுவையாக அமைவதால், ஒலிபரப்பு தொடங்கி முடியும் வரை நேரம் போவது தெரிவதில்லை. நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டாலும், இதுவே நான் எழுதும்
கலை: அன்பு சஜீத் உங்கள் அன்புக்கும் ஆர்வத்துக்கும் நன்றிகள் பல.
அடுத்து ராசிபுரம் எஸ். மணிமேகலை அறிவியல் கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். நகரங்களில் வாழும் மக்கள் சிறிய உடல் நல பாதிப்பு என்றாலும் மருத்துவ சிகிச்சைக்காக அதிக பணம் செலவழித்து, அதிக தூரமும் சென்று பெரிய மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளது. கிரமப்புற மக்கள் நகரங்களிலுள்ள மருத்துவமனைக்கு வருவதால் ஏற்படும் மக்கள் கூட்டம் இதற்கு முக்கிய காரணம். ஆனால் தற்போது சீனாவில் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கு அருகிலும் மருத்துவ நிலையங்கள் உள்ளன. மேலும் தொலைபேசி மூலம் அழைத்தால் அவர்கள் இல்லங்களுக்கே வந்து மருத்துவ சேவை செய்கின்றனர். மக்களுக்காக சீன அரசு இவ்வாறெல்லாம் மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ந்தேன்.

க்ளீட்டஸ்: அடுத்து தார்வழி பி. முத்து எழுதிய கடிதம். சீனாவில் உள்ள வறிய மாணவர்களுக்கான சீன அரசின் உதவி பற்றிய செய்தித்தொகுப்பு நிகழ்ச்சி கேட்டேன். வறுமையில் வாடும் குடும்பங்களில் உள்ள மாணவர்களது கல்விக்காக சீன அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அறிந்துகொள்ள முடிந்தது. வறிய மாணவர்களும் தடையின்றி கல்விபெறவேன்டும் என்ற நோக்கில் சீன அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.