• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-15 16:47:33    
சீனத் தேயிலை

cri

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முதலாக நிலவில் காலடி வைத்தபோது, ஏதோ குரல் கேட்டு திரும்பினாராம். சாரே சாய் வேணுமோ என்று நம்மூர் தேநீர்கடைக்காரர் ஒருவர் கையில் தேநீரோடு நின்றிருந்தாராம். கேரளத்துக்காரர்கள் அங்கிங்கெனாதபடி உலகின் அனைத்து மூலைகளிலும் காணப்படுவதை இப்படி வேடிக்கையாக நகைச்சுவை துணுக்காக கூறுவதுண்டு. யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் இங்கே இதை நாம் குறிப்பிடவில்லை.
வீதிக்கோரு தேநீர் கடை என்படு இன்றைக்கு பெருநகரங்களில் வேண்டுமென்றால் அதிகம் பார்க்கமுடியாது போகலாம். ஆனால் சிறு நகரங்கள், மாநகரின் புறநகர் பகுதிகள் எல்லாம் தேநீர் கடைகளை ஒரு சந்திப்பிடமாக, செய்திகள் பரிமாறப்படும் இடமாக இன்றளவும் கொண்டுள்ளன.


தேநீர் அருந்தும் வழக்கம் இன்றைக்கு இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. உலகின் பல நாடுகளில் தேநீர் அருந்தும் மக்கள் இருக்கின்றனர். சோம்பலை விரட்டி, உற்சாகத்தை தழுவிக்கொள்ள ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் போதும்.
தேயிலைக்கும், தேநீர் அருந்தும் பழக்கத்துக்கும் பிறப்பிடம், சீனாதான். 5 முதல் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு ம்ன்பேயே சீனாவில் தேயிலைச் செடி இருந்ததாக நம்பப்படுகிறது. தேயிலையை பயிர்செய்யும் வழக்கம் சீனாவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்துள்ளது என்பதும் பரவலான நம்பிக்கை.
பட்டும், பீங்கானும், தேயிலையும் ஆயிரம் ஆன்டுகளுக்கு முன்பேயே சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த வகையில் தேயிலையும் சீனாவின் ஏற்றுமதி பொருட்களில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது.


1127 லிருந்து 1279ம் ஆண்டு வரையான தெற்கு சுங் வம்சக்காலத்து வாழ்க்கையை மெங் லியாங் லு என்ற புத்தகத்தில் விளக்கிய வூ சுமூ என்பவர், மக்கள் அன்றாடம் தவறாமல் விறகு, அரிசி, எண்ணெய், உப்பு, சோயா சாஸ், புளிக்காரம், மது மற்றும் தேநீரை கொண்டிருத்தல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். 1279 முதல் 1368 வரையிலான யுவான் வம்சக்காலத்தில் இந்த பட்டியலிலிருந்து மது நீக்கப்பட்டது. தேயிலை உள்ளிட்ட இதர ஏழு பொருட்களும் அன்றாட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான 7 பொருட்களாக கருதப்பட்டன.


ஆனால் 618 முதல் 907 வரையான தாங் வம்சக்காலத்தில் தேநீர் அருந்தும் வழக்கம் மக்களிடையே வெகுவாக பரவத்தொடங்கியபோது, பிரபலமான பல்வேறு வகை தேநீர் உருவாகத்தொடங்கின. தங் வம்சக்காலத்தின் தேயிலை விற்பன்னர், வல்லுனரான லூ யூ எழுதிய ச்சா ஜிங் எனப்படும் தேயிலை பற்றிய உலகின் முதல் நூலும், தேநீர் தயாரிப்பில் நீரின் முக்கியத்துவம் பற்றிய ஷாங் யோசின் என்பவரது தேநீர் தயாரிப்பு குறிப்புகள் அடங்கிய ஜியன் ச்சா ஷுவெய் ச்சி என்ற குறிப்பேடும் மனிதகுல நாகரிக வரலாற்றில் முக்கிய இடம்பெறுகின்றன. தாங் வம்சக்காலத்தில் சீனப்பட்டு, பீங்கான் மற்றும் தேயிலை சீன வெளிநாட்டு வர்த்தக மற்றும் பண்பாட்டு பரிமாற்றத்தின் முக்கிய பொருட்களாக மாறின.