2008ம் ஆண்டு, சீனா மற்றும் உலக நாடுகளின் ஒலிம்பிக் ஆண்டாகும். தனிச்சிறப்பு மற்றும் உயர் நிலை வாய்ந்த ஒலிம்பிக் போட்டியையும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியையும் பெய்சிங் நடத்த வேண்டும் என்று பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்புக் குழுத் தலைவர் liu qi நேற்று தெரிவித்தார். ஒலிம்பிக் போட்டிக்கான ஆயுத்த பணிகளுக்கு 6 ஆண்டு கால போக்கு உள்ளது. திட்டத்திற்கு இணங்க, 2007ஆம் ஆண்டுக்கான குறிக்கோள் நனவாக்கப்பட்டது. பொதுவாக, ஒலிம்பிக் திடல்கள் அரங்குகள் வசதியான கட்டுமானங்கள் ஆகியவை பற்றிய கடமைகள் நிறைவேறியுள்ளன. 2008ம் ஆண்டு, ஒலிம்பிக் போட்டிக்கான முழு ஆயத்தக் கடமைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும். ஒலிம்பிக் போட்டிக்கான பிரச்சாரத்தை வலுப்படுத்தி, அமைதியான ஒலிம்பிக் போட்டியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று liu qi கூறினார்.
இவ்வாண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் வரலாற்று சிறப்புமிக முன்னேற்றத்தை பிரேசில் நனவாக்கும். பதக்க வரிசையில் இது 12வது இடத்தை பெற முடியும். பிரேசில் செய்தி ஊடகம் ஒன்று இவ்வாறு முன் கூட்டியே மதிப்பிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்குள் நடைபெற்ற உலகக் கோப்பைகள் மற்றும் இதர உலக சமியன்பட்ட போட்டிகளில் பிரேசில் சிறப்பான சாதனைகளைப் பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் பிரேசில் பிரதிநிதிக் குழு 7 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களைப் பெறலாம். இப்போட்டியின் பதக்க வரிசையில் 12வது இடத்தை பிடிக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது.
கடந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பிரேசில் பிரதிநிதிக் குழு 5 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளி பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது. அப்போட்டியின் பதக்க பட்டியிலில் 16வது இடத்தை பிடித்தது. கடந்த 2 ஆண்டுகளில், தடகளம், கால் பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், வாலிபால் முதலிய விளையாட்டுகளில் பிரேசில் வீரர்களும் வீராங்கனைகளும் மகிழ்ச்சியூட்டும் சாதனைகளைப் பெற்றுள்ளனர்.
கிரேக்க ஒலிம்பிய நகரம் ஆக்கப்பூர்வமாகப் பாடுபடுவது ஒலிம்பியா நகரம், மரம் நடும் பணியை திட்டப்படி நிறைவேற்றும். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான புனிதத் தீபத்தை திரட்டும் பணி தடையின்றி நடைமுறைப்படுத்துவதற்கென பண்டைக்கால ஒலிம்பியா சிதிலத்துக்கு அருகில் தீயில் நாசமாக்கப்பட்ட மரத்தை இந்நகரம் தன்னால் இயன்றதனைத்தையும் செய்து புதுப்பிக்கும். கிரேக்க ஒலிம்பியா நகராட்சித் தலைவர் GIORGOS AIDONIS, உள்ளூர் நேரப்படி ஜனவரி திங்கள் 6ம் நாள், சோதனைப் பயணம் மேற்கொண்ட கிரேக்கத்திலுள்ள சீனத் தூதர் luolinquan இடம் இவ்வாறு அறிமுகப்படுத்தினார். கடந்த ஆகஸ்டு திங்கள் ஒலிம்பியா நகரத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, சீனத் தூதர் luolinquan மிகவும் கவனம் செலுத்தி வருகின்றார். புனிதத் தீயைத் திரட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடு குறித்து, அவர் ஒலிம்பியா நகராட்சித் தலைவர் GIORGOS AIDONISயுடன் கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். பெய்ஜிங் ஒலிம்பிக விளையாட்டுப் புனிதத் தீபத்தை திரட்டும் விழா, 2008ம் ஆண்டு மார்ச் திங்கள் 24ம் நாள் வழமைக்கிணங்க பண்டைக்கால ஒலிம்பிக் சிதிலத்தில் நடைபெறும்.
|