• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-17 14:09:38    
Mutianyu பெருஞ் சுவர்

cri

சீன பெருஞ் சுவரின் Mutianyu பகுதி, huai rou வட்டத்துக்குள் அமைந்தது. இது, தேசிய நான்கு A தர நிலை சுற்றுலா பிரதேசமாகும். Mutianyu பெருஞ் சுவரில் பல எழில் மிக்க இயற்கை காட்சி இடங்கள் உண்டு. இங்கு காடுகள் அடர்ந்து வளர்கின்றன. பழமையான மரங்கள் விண்ணை முட்டுகின்றன. நீண்டகால வரலாறு வளமிக்க பண்பாடு, விநோதமான நிலவியல் அமைவு, கால நிலை ஆகிய காரணத்தால், சீன பெருஞ் சுவரின் Mutianyu பகுதி, ஒரு அருமையான சுற்றுலா பிரதேசமாகும்.

Mutianyu பெருஞ் சுவர் சுற்றுலா பிரதேசத்தில், 3 கோடிக்கு மேற்பட்ட யுவான் ஒதுக்கீடு செய்யபட்டு, இப்பிரதேசத்திலான சீன mengshi நகர், பெருஞ் சுவர் ஹோட்டல் ஆகியவை கட்டியமைக்கப்பட்டுள்ளன. su zhou தோட்டவடிவ கலையின் கட்டிட வேலைப்பாட்டுக்கு இணங்க, சீன mengshi நகர் கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், இந்நகரில், சீனாவின் பல்வேறு இடங்களிலிருந்து ஏற்றிச் செல்லப்படுகின்ற அரிய கற்பாறைகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

பெருஞ் சுவர் ஹோட்டல் புகழ் பெற்ற பெருஞ் சுவரின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு உணவகம், விடுதி, கூட்ட மண்டபங்கள் ஆகியவை உண்டு. இந்த ஹோட்டலில் நூறு பேர் உண்டு, தங்கியிருக்க முடியும். 2001ம் ஆண்டில், இது சீனத் தேசியச் சுற்றுலாத் துறையால் இரண்டு நட்சத்திர ஹோட்டலாக உறுதிபடுத்தப்பட்டது.