• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-18 15:18:22    
சீனாவின் வா இனம்

cri
வா இன மக்கள், சீனாவின் Yunnan மாநிலத்தின் மேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில, வசிக்கின்றனர். இவ்வின மொத்த மக்கள் தொகை 3லட்சத்து 50ஆயிரமாகும். அவர்கள் முக்கியமாக Yunnan மாநிலத்தின் Ximeng, Cangyuan, Menglian, Gengma ஆகிய மாவட்டங்களில் கூடி வாழ்கின்றனர். மற்றொரு பகுதியினர் Xishuangbanna தெய் இனம் மற்றும் Dehong ஜிங்போ இனத் தன்னாட்சி சோக்களில் சிதறி வாழ்கின்றனர். முன்பு இவ்வினம் காவா இனம் என அழைக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தற்போதைய பெயர் பயன்படுத்தப்படத் தொடங்கியது.
வா இன மக்களுக்கு சொந்த மொழி உண்டு. இது தென் ஆசிய மொழி குடும்பத்தின் wabenglong கிளையைச் சேர்ந்தது. தெய் இன மக்களின் செல்வாக்கால், அவர்கள் புத்த மதத்தைத் தழுவியுள்ளதோடு, சில இடங்களில் கிறிஸ்தவர்களும் உள்ளனர்.
வா இன மக்கள் முக்கியமாக வேளாண்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்களின் பகுதிகளில் குதிரையில் ஏறி்ப் பயணம் செய்து கொண்டு ஊருக்குள் நுழைவது தடைச்செய்யப்பட்டுள்ளது. ஊரின் வாசலில் குதிரையிலிருந்து இறங்க வேண்டும். அத்துடன், பிறரின் தலையையும் காதையும் தொடுவது, பிறருக்கு முட்டைகள், மிளகாய்கள் அன்பளிப்பாக வழங்குவது, இளம் பெண்களுக்கு அலங்காரப்பொருட்களை வழங்குவது, வீட்டில் விருந்தினர் பணத்தை எண்ணுவது ஆகியவை இவ்வின மக்களின் பழக்கவழக்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர அவர்களின் வீட்டிற்கு முன்பு, மரத் தடி ஒன்று வைக்கப்பட்டால், வீட்டில் நோயாளிகள் இருக்கிறதனர் என்ற பொருளைக் குறிக்கிறது, அப்போது மற்றவர் வீட்டிற்குள் நுழையக் கூடாது என பொருள்படுகிறது.


வா இன மக்கள் எல்லோரும், மிளகாயைச் சாப்பிட விரும்புகின்றனர். உணவில் மிளகாய் இன்றியமையாதது என்ற பழமொழி அவர்களிடையே இருக்கிறது. வா இனத்தின் இறைச்சிப் பொருட்களில் பெரும்பாலவை வீட்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகள் மூலம் ஆக்கப்படுபவை. இது தவிர, எலிகளையும் புழு பூச்சிகளையும் சாப்பிடும் வழக்கம் அவர்களிடம் உண்டு. பாக்கு உண்பது வா இனமக்களின் அலாதிப்பிரியமான பழக்கமாகும். உழைக்கும் போது, ஓய்வு எடுக்கும் போது, பேசும் போது, அவர்கள் பாக்கு உண்பது வழக்கம்.


முன்பு, வா இன மக்கள், ஆதிகால மதமான இயற்கை வணங்கும் நம்பிக்கை கொண்டவர்கள். ஒவ்வொரு பொருளுக்கும் உயிர் உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர். ஏறகுறைய எல்லா திருநாட்களும் இவர்களால் குதுகலாமாக கொண்டாடப்படுகிறது.