• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-18 13:35:39    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பங்காற்றும் சீன பெண்மணிகள்

cri
பெய்சிங்கில் நல்ல உடல் நலத்துடன் கூடிய ஒரு 103 வயதான மூதாட்டி ஒருவர் இருக்கிறார். அவர் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட விரும்புகிறார். அவருடைய பெயர் சௌ சோ சேங். 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தனது நகரான பெய்சிங்கில் நடைபெறுவது பற்றி, அவர் மிக மகிழ்ச்சியடைந்தார். விளையாட்டு போட்டிகளை கண்டு ரசிப்பதோடு, ஒரு கனவை நிறைவேற்றயும் விரும்புகிறார். அவர் கூறியதாவது

ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் ஓடுவராக மாறி நாட்டுக்கு பெருமையை ஏற்படுத்த விரும்புகிறேன் என்றார் அவர்.
இது அவருடைய விருப்பமாகும். ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் மீது அவர் ஆழமான உணர்வு கொண்டுள்ளார். 2004ம் ஆண்டு Athens ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கை பெய்சிங்கில் நடைபெற்ற போது, 100 வயதான அவர், மிகவும் வெப்ப வாணிலையில் இந்நடவடிக்கை பார்வையிட்டு ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் பங்கேற்றவர்களுடன் நிழற்படம் எடுத்துக்கொண்டார். இதனால், ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் ஓடுபவராக அவர் விரும்பினார். அவருடைய எண்ணத்திற்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் புரிந்துணர்வையும் ஊக்கத்தையும் வழங்கியுள்ளனர். அவருடைய மகன் சௌ சேங் ச்சியாங் கூறியதாவது
ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் ஒலிம்பிக் தீபத் தொடரோட்டத்தில் பங்கேற்க எமது தாயார் விரும்புவதாக நாங்கள் சிறப்பாக ஆதரவுக்கிறோம். செய்தியேடு தொலைகாட்சி ஆகிய செய்தி ஊடகங்களில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடர்பான செய்திகளை, எமது தாய்க்கு அடிக்கடி விளக்கி கூறுகிறோம் என்றார் அவர்
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி பற்றிய தனது கனவை நிறைவேற்றும் வகையி்ல், நாள்தோறும் அவர் நடை பழகுவதில் ஊன்றி நிற்கிறார். பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு அமைப்பு குழு, ஒலிம்பிக் தீபத் தொடரோட்ட நடவடிக்கையின் துவக்கத்தை அறிவித்ததும், அவருடைய வீடு அமைந்துள்ள பகுதியின் குடியிருப்பிட கமிட்டிக்கு அவர் முதலாக விண்ணப்பம் செய்தார். ஒலிம்பிக் தீபதை அவர் தனது கைகளில் ஏந்தினால் உலகளவில் அனைத்து நண்பர்களும், பெய்சிங்கின் நூற்றாண்டை கடந்த மூதாட்டியை காணலாம். சீன மக்களின் வாழ்க்கை மாற்றத்தை காணலாம் என்றார் அவர்.

சௌ சோ சேங் போல, பல சீனர்களுக்கு, தத்தமது ஒலிம்பிக் கனவுகள் இருக்கின்றன. பெய்சிங் விமான மற்றும் விண்வெளி பல்கலைகழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவி லியாங் சேங், முயற்சியுடன், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தன்னார்வு தொண்டராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இது அவருடைய வாழ்க்கைக்கு பெரும் மாற்றத்தை கொண்டு வந்தது. அவர் கூறியதாவது.
முதலில் பொதுவாக கவனம் செலுத்தும் தகவங்களை பொறுத்த வரை முன்பு இருந்ததை விட இப்போது வேறுபாடு உள்ளது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தொடர்பான செய்திகளுக்கு நான் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, தொண்டர்கள் பற்றிய செய்திகள் என்றார் அவர்.
அனைவரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு தொண்டர் முறையில் சேவை வழங்க முடியாது. ஆனால், உலகிற்கு மிக தலைசிறந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை வழங்கும் வகையில், பல சீன மக்கள் தத்தமது நிலைகேற்ப தாய்நாட்டில் நடைபெறும் இந்த ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆதரவு அளித்து, முழுமூச்சுடன் பங்காற்றுகின்றனர்.