பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சேவை செய்யும் வகையில், 9400 வாகனங்களும் 17 ஆயிரம் ஓட்டுநர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் பேருந்து சிறப்பு நெறி மற்றும் செயல்பாட்டு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. பெய்சிங் மாநகர தொடர்புடைய வாரியத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது. கடந்த ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்தைப் பெய்சிங் மாநகரம் வகுத்து, பல்வேறு போக்குவரத்து சேவையின் வரையறையை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், பேருந்து, சுரங்க இருப்புப்பாதை, வாடகைச் சிற்றுந்து ஆகியவற்றிலான பணியாளர்களுக்கு ஒலிம்பிக் பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று அறியப்படுகின்றது.
சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் சீன ஒலிம்பிக் குழுயின் ஏற்பாட்டில் "2008 ஒலிம்பிக் நுண்கலை மாநாடு" என்ற நடவடிக்கை இன்று பெய்சிங்கில் துவங்கியது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் பண்பாட்டு விழாவின் பல நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். கலை, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு மேலும் மெருகு ஊட்டுகிறது என்பது இதன் முக்கிய கருவாக அமைகிறது. 80 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த புகழ் பெற்ற கலைஞர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொள்கின்றார்கள். இப்படைப்புகளில், பாரம்பரிய சீன ஓவியம், எண்ணெய் ஓவியம், சிற்பக்கலை, டிஜிட்டல் கலை முதலியவை இடம் பெறுகிறன. படைப்புக்களை திரட்டும் பணி இன்று துவங்கின.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி தற்போது, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்கு விண்ணப்பித்த தொண்டர்களிந் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆனால், சிறுபான்மை மொழி திறமைசாலிகள் மிகவும் ருறைவு. பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தொண்டர்கள் அலுவலகத்தின் தலைவர் லீயு சியன் இன்று பெய்சிங்கில் இவ்வாறு தெரிவித்தார்.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் தொண்டர்கள் திட்டப்பணி மாபெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. விண்ணப்பங்களின் எண்ணிக்கை வரலாற்றில் மிகச் சிறப்பான பதிவாகும் என்று லீயு சியன் கூறினார்.
|