• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-21 09:52:57    
சீனக் கட்டிடத் துறையின் புதிய முன்னேற்றம்

cri

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியைச் செயல்படுத்தத் தொடங்கியது முதல் இது வரை, சீனாவின் ஒட்டுமொத்த ஆற்றல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மக்களின் தார்மீக வாழ்வின் தேவைகளுக்கு ஏற்ப, தேசிய நாடகப் பெரு அரங்கம் கட்டியமைக்கப்பட்டது.

21ம் நூற்றாண்டில், சீன அரசால் முதலீடு செய்யப்பட்ட அடையாளம் வாய்ந்த பண்பாட்டு வசதி இதுவே ஆகும். தேசிய நாடகப் பெரு அரங்கம், 2001ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாகக் கட்டியமைக்கத் துவங்கியது முதல், சீனாவின் பல்வேறு துறையினரால் மிகவும் கவனம் செலுத்தப்பட்டது. பிரெஞ்சு நாட்டவர் PAUL ANDREUவால் வடிவமைக்கப்பட்ட இப்பெரிய அரங்கத்தின் முக்கிய கட்டிடம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இது மட்டுமல்ல, இவ்வரங்கத்தின் கட்டுமானப் பணி அறைகூவல் மிகுந்ததாக அமைந்தது. இவ்வரங்கத்தின் பரந்த பொது மண்டபம் உலகில் மிகப் பெரியது. இம்மண்டபத்தின் கூரை, சீனக் கட்டிடங்களில் மிகப் பெரிய வளைவாகும் என்று கட்டுமானத்துக்குப் பொறுப்பாளரான pengchengjun தெரிவித்தார். தேசிய நாடகப் பெரு அரங்கம் 6 ஆண்டுகாலத்தில் கட்டியமைக்கப்பட்டது.

இதன் முக்கிய கட்டிடம் 47 மீட்டராகவும், தரைக்கடியில் மிகத் தாழ்ந்த 33 மீட்டராகவும் இருக்கிறது. இவ்வரங்கம், பெய்ஜிங் மாநகரத்தின் அழகான அடையாளமாக மாறியுள்ளது. இவ்வரங்கம், கலைத் துறையின் ஒரு உயர் தொழில் நுட்பம் வாய்ந்த மேடையாக விளங்கியுள்ளது. சீன பாணியும் எழில் மிக்க நவீன வடிவமைப்பும் இதில் இணைந்து காணப்படுகிறது.

இவ்வரங்கம் தேசிய நாடகப் பெரு அரங்கம், இசை நாடக மண்டபம், இசை மண்டபம் உள்ளிட்ட மூன்று மண்டபங்களைக் கொண்டது. இதில் ஏறக்குறைய 5 ஆயிரத்து 4 நூறு இருக்கைகள் உள்ளன.

நண்பர்களே, அற்புதமான இந்த தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.