• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-22 15:31:28    
தௌ ரன் திங் பூங்கா

cri

தௌ ரன் திங் பூங்கா, பெய்ஜிங் மாநகரின் மையத்தின் தென் பகுதியிலுள்ள தௌ ரன் திங் பாலத்தின் வடமேற்கில் இருக்கிறது. இப்பூங்காவின் மொத்த பரப்பளவு, 59 ஹெக்டராகும். இதிலுள்ள நீர்நிலைகளின் பரப்பளவு, 17 ஹெக்டராகும். 1952ம் ஆண்டு, இப்பூங்கா கட்டியமைக்கப்பட்டது. இது, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின், தலைநகர் பெய்ஜிங்கில் மிக முன்னதாகக் கட்டியமைக்கப்பட்ட நவீனத் தோட்ட பூங்காவாகும். இங்குள்ள அழகான தோட்டக் காட்சிகள், செழுமையான பண்பாட்டு அம்சங்கள், பிரகாசமான புரட்சி வரலாறு முதலியவற்றால், இப்பூங்கா, புகழ்பெற்ற சுற்றுலா இடமாக மாறியுள்ளது.

1695ம் ஆண்டு, தாங் வம்சக்காலத்தின் கவிஞர் Bai Juyi இயற்றிய கவிதை ஒன்றில், தௌ ரன் என்ற இரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன. இந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி, பூங்காவின் விதான மண்டபத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. இது, முழு நாட்டிலிருந்துமான அறிஞர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களால் சுற்றுலா இடமாகக் கருதப்பட்டது. சிங் வம்சக்காலத்தின் சுமார் 200 ஆண்டுகாலத்தில், இவ்விதான மண்டபம், நீண்ட காலம் புகழ்பெற்று, நகரின் ஒரு சுற்றுலா இடமாக மாறியது.

தௌ ரன் திங் பூங்காவைச் சுற்றி, புகழ்பெற்ற வரலாற்றுக் காட்சிகள் பல உள்ளன. வட மேற்கில், Longshu கோயில் இருக்கிறது. இக்கோயிலில், Tiannige, Kanshan மாளிகை முதலிய கட்டிடங்கள் இடம்பெறுகின்றன. பிரமுகர்கள், அடிக்கடி, இங்கு சென்று, கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். தென்கிழக்கில் Heilongtan, Longwangting, தென்மேற்கில், Fengshiyuan, வடகில் Yaotai, வடக்கிழக்கில் Xiang கல்லறை, Yingwu கல்லறை முதலியவை இருக்கின்றன. இக்காட்சிகள் பல கட்டியமைக்கப்பட்ட காலம், தௌ ரன் திங் கட்டியமைக்கப்பட்ட காலத்தை விட, முன்னதாக இருக்கிறது.

அண்மைய கால தௌ ரன் திங், வரலாற்றின் முக்கிய அத்தியாயத்தைக் கொள்கிறது. மே நான்கு இளைஞர் இயக்கத்தின் முன்னும் பின்னும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை தோற்றுவித்தவரும் தலைவருமான Li Dazhao, Mao Zedong, Zhou Enlai ஆகியோர், இங்கு வந்து, புரட்சி நடவடிக்கை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.