• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-22 10:29:45    
சீனத் தேயிலை (2)

cri

மிங் வம்சக்காலத்தில் கடல்வழி பட்டுப்பாதையில் கொண்டு செல்லப்பட்ட பொருட்களில் இந்த மூன்று பொருட்கள்தான் பெறுமதியும், பெரு வரவேற்பும் பெற்ற வர்த்தக பொருட்களாக இருந்தன. சீனத் தேயிலை உற்பத்தி வரலாறு ஆயிரமாண்டுகளுக்கு முன் இருந்து தொடங்குகிறது. ஏறக்குறைய உலகின் முன்னணி தேயிலை உற்பத்தி நாடுகள் எல்லாம் தங்களது முதல் தேயிலைச் செடி வகையை சீனாவிலிருந்துதான பெற்றன எனலாம். மட்டுமல்ல தங்களது தேயிலை உற்பத்தியை மேம்படுத்தவென இந்நாடுகள் சீனத் தேயிலை பயிரிடுதல், பதனீடு ஆகியவற்றை கற்றுத்தேர பிரதிநிதிகள் பலரை சீனாவுக்கு அனுப்பி வைத்தன.


தங் வம்சக்காலத்துக்கு முன்பாகவே சீனத்தேயிலை ஜப்பான், கொரியா ஆகியவற்றுக்கு முதலில் ஏற்றுமதி செய்யப்பட்டது. பின்னர், இந்தியாவுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலை, மிங் மற்றும் சிங் வம்சக்காலத்தில் அரபு தீபகற்பத்துக்கு ஏற்றுமதியானது.
17ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீனத்தேயிலை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. மேல்தட்டு மக்களிடையே தேநீர் அருந்தும் வழமை ஒரு நாகரீக அடையாளமாக மாறியது. உலகின் பொருள் மற்றும் பொருள்சாரா ஆன்மீக நாகரிகத்தின் அங்கமாக சீனப்பட்டு, பீங்கான் அகியவையுடன் சீனத்தேயிலையும் சிறப்பான பங்களித்துள்ளது என்று சொல்லலாம்.


இன்றைக்கு 40 க்கு அதிகமான நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆசிய நாடுகள் உலகின் 90 விழுக்காட்டு உற்பத்தியை செய்கின்றன. இதில் வேடிக்கையான உண்மை, இந்நாடுகள் எல்லாவற்றின் தேயிலைச் செடிகளும், சீனாவோடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொண்டுள்ளன, அவற்றின் பூர்வீகம், மூலம் சீனாவே என்பதாகும்.


தேயிலை அல்லது தேநீருக்கு இணையான பல வார்த்தைகள் சீன மொழியில் தேயிலைக்கு கூறப்படும் ச்சா என்பதிலிருந்தே வந்தது எனலாம். சீனாவில் ச்சா எனப்படுவது, ரஷ்யர்களால் ச்சாய் என்ற அழைக்கப்படுகிறது. இதற்கு ஈடாக வட சீனாவில் ச்சாயே என்று தேயிலையை அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் டீ என்றழைப்படும் தேயிலை, சியாமனிலும் ஏறக்குறைய அப்படியே அழைக்கப்படுகிறது. ஜப்பானிய எழுத்து வடிவில் தேயிலை என்பது சீன மொழியில் இருப்பதை போன்றே எழுதப்படுகிறது.