வாணி -- க்ளீடட்ஸ், கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதை இன்று முதலில் நேயர்களுடன் சேர்ந்து மீளாய்வு செய்வோம். க்ளீட்டஸ் -- சரி வாணி – கடந்த வகுப்பில் வழி கேட்பதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை கூறினோம். இது பற்றி நாம் இன்று பயிற்சி செய்யலாம். க்ளீட்டஸ்— வாணி, 请问,友谊商店怎么走?நட்புறவு கடைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று இப்படி கேட்கலாமா? வாணி – 友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er. நட்புறவு கடையா? அதோ அங்கே தான். 就,jiu, 4வது தொனி, தானே என்ற பொருள். 那儿,那里,Na er,அல்லது na li ஒரே பொருள். அங்கே என்ற பொருள். 友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er. க்ளீட்டஸ் --友谊商店,就在那儿。You yi shang dian, jiu zai na er. நட்புறவு கடையா? அதோ அங்கே தான். வாணி-- Na er,அல்லது na li, அங்கே என்ற பொருள். அதே போல், இங்கே என்பதைச் சொல்ல வேண்டுமானால், 这儿,这里,zhe er அல்லது zhe li என்று சொல்லலாம்.
க்ளீட்டஸ் –Na er,அல்லது na li, அங்கே என்ற பொருள். 这儿,这里,zhe er அல்லது zhe li. இங்கே என்ற பொருள். வாணி – அடுத்து, பேருந்து பயணம் பற்றிய சில சொற்கள். 公交车, gong jiao che என்பது நகரப் பேருந்து. 公交车, gong jiao che க்ளீட்டஸ் --公交车, gong jiao che. நகரப் பேருந்து. வாணி – 坐公交车zuo gong jiao che என்பது பேருந்தில் செல்வது என்ற பொருள். 坐公交车zuo gong jiao che க்ளீட்டஸ் --坐公交车zuo gong jiao che. பேருந்தில் செல்வது. வாணி – 上车,shang che, பேருந்தில் ஏறுவது. 上车,shang che。 க்ளீட்டஸ் --上车,shang che, பேருந்தில் ஏறுவது. வாணி – 下车,xia che, பேருந்தை விட்டு இறங்குவது. 下车,xia che. க்ளீட்டஸ் --下车,xia che. இசை வாணி – மேலும், கடந்த வாரம் உச்சரிப்பு பயிற்சியில், 怎么, பற்றி உச்சரிப்பு பயிற்சி செய்தோம். 怎么,எப்படி என்ற பொருள். Zen, 3வது தொனி, 么, me, 走 zou, 3வது தொனி, 怎么走, zen me zou? க்ளீட்டஸ் --怎么, எப்படி என்ற பொருள். Zen, 3வது தொனி, 么, me, 走 zou, 3வது தொனி, 怎么走, zen me zou? க்ளீட்டஸ் --怎么走, zen me zou? இசை வாணி – இன்று பேருந்து மூலம் பயணம் செய்வது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். க்ளீட்டஸ்— வாணி, 请问,友谊商店怎么走?நட்புறவு கடைக்கு எப்படி செல்ல வேண்டும் என்று இப்படி கேட்கலாமா? வாணி – 坐332路汽车。332ம் எண் பேருந்து மூலம் போகலாம். 汽车, என்பது வண்டிகளின் பொது பெயராகும். இந்த வாக்கியத்தில், இது பேருந்து என்ற பொருள். 路என்பது பேருந்தின் வழித்தட எண்ணைக் குறிக்கிறது. 坐332路汽车。Zuo 332 lu qi che. க்ளீட்டஸ் -- 坐332路汽车。Zuo 332 lu qi che. 332ம் எண் பேருந்து மூலம் போகலாம். வாணி --坐332路汽车。Zuo 332 lu qi che. க்ளீட்டஸ் -- 坐332路汽车。Zuo 332 lu qi che. 332ம் எண் பேருந்து மூலம் போகலாம். வாணி 车che , அல்லது 汽车 qi che சீன மொழியில் வாகனம் தானே?
வாணி – ஆமாம். சில வாகனங்கள் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். Xiao qi che, 小汽车,கார் என்ற பொருள். க்ளீட்டஸ் -- Xiao qi che, 小汽车,கார். வாணி – 出租车。Chu zu che, வாடகை கார் என்ற பொருள். க்ளீட்டஸ் -- Chu zu che, வாடகை கார். வாணி – 卡车,Ka che. லாரி என்ற பொருள். க்ளீட்டஸ் --卡车,Ka che. லாரி வாணி – சீனாவில் அதிக மக்கள் விரும்பும் 自行车,Zi xing che. மிதி வண்டி. இதனை பயன்படுத்தினால், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதேவேளையில், கட்டணமும் சிக்கனப்படுத்தப்படலாம். உடல் பயிற்சியும் செய்தது போலாகும். போக்குவரத்துக்கு நல்ல வசதியானது. 自行车,Zi xing che. க்ளீட்டஸ் --自行车,Zi xing che. மிதி வண்டி. வாணி – 摩托车。Mo to che, மோட்டர் சைக்கிள். க்ளீட்டஸ் --摩托车。Mo to che, மோட்டர் சைக்கிள். இசை வாணி – அதிக வகை வாகனங்களின் பெயர்களைக் கற்றுக்கொண்டுள்ளோம். அடுத்த சொற்கள். 坐什么车?எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும்?坐什么车?zuo shen me che? க்ளீட்டஸ் --坐什么车?zuo shen me che? எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும்? வாணி – என்னைப் பின்பற்றி மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். 坐什么车?zuo shen me che? க்ளீட்டஸ் --坐什么车?zuo shen me che? எந்த பேருந்து மூலம் செல்ல வேண்டும்? வாணி – இதற்கு வேறு ஒரு வகை பயன்பாடு உண்டு. 怎么坐车?Zen me zuo che, பேருந்து மூலம் போனால், எப்படி செல்ல வேண்டும்? 怎么坐车?Zen me zuo che? க்ளீட்டஸ் --怎么坐车?Zen me zuo che?பேருந்து மூலம் போனால், எப்படி செல்ல வேண்டும்? வாணி --怎么坐车?Zen me zuo che? க்ளீட்டஸ் --怎么坐车?Zen me zuo che?பேருந்து மூலம் போனால், எப்படி செல்ல வேண்டும்?
வாணி – உச்சரிப்பு நேரம். Ai, என்ற ஒலியை இன்று கற்றுக்கொள்கின்றோம். Ai க்ளீட்டஸ் – Ai வாணி – Ai, 4வது தொனி. 爱, நேசித்தல். க்ளீட்டஸ் -- Ai, 4வது தொனி. 爱, நேசித்தல் அல்லது அன்பு செய்தல். வாணி – 我爱我的祖国。祖国,zu guo, தாய்நாடு. Wo, நான், wo de, என் என் தாய்நாட்டை நேசிக்கின்றேன். 我爱我的祖国。Wo ai wo de zu guo. க்ளீட்டஸ் --我爱我的祖国。Wo ai wo de zu guo. என் தாய்நாட்டை நேசிக்கின்றேன். வாணி -- 我爱我的祖国。Wo ai wo de zu guo. க்ளீட்டஸ் --我爱我的祖国。Wo ai wo de zu guo. என் தாய்நாட்டை நேசிக்கின்றேன்.
|