• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-22 09:31:37    
சிவப்பு முள்ளங்கி இடம்பெறும் உணவு வகை

cri

வாணி -- வணக்கம். நேயர்களே, க்ளீட்டஸ் வாணி இருவரும் சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் தங்களை வரவேற்கின்றோம். க்ளீட்டஸ், பொதுவாக கூறின், இந்தியாவில் ஆண்கள் சமையலறைக்குப் போகும் வழக்கம் இல்லை, சரி தானே?


க்ளீட்டஸ் -- 。。。ஆனால், கடந்த ஆண்டு நான் பெய்ஜிங்கில் தனியாகப் பணி புரிந்து வாழ்ந்த போது, சொந்தமாக உணவு பொருட்களைத் தயாரிக்க வேண்டும். சோறு,...உள்ளிட்ட சில எளிதான உணவு வகைகளின் தயாரிப்பு எனக்கு பிரச்சினையில்லை. வாணி, உங்கள் வீட்டில் எப்படி?


வாணி -- என் கணவருக்குச் சமையல் பற்றி ஒன்றும் தெரியாது. ஆனால், சாப்பாட்டுக்குப் பின், தட்டுகளைச் சுத்தம் செய்யும் போது அவர் எனக்கு உதவி செய்கின்றார்.


க்ளீட்டஸ் -- பரவாயில்லை.


வாணி -- மேலும், இன்றைய வாழ்க்கையில், உணவுகளைத் தயாரிக்கும் போது உணவு வகைகளின் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, நீண்ட நேரம், அலுவலகத்தில் கணிணிக்கு முன் உட்கார்ந்தால், வாரந்தோறும் 3 சிவப்பு முள்ளங்கிகளை உட்கொள்வது நல்லது. இதில் அதிக வைட்டமின் ஏ உள்ளது. கண்களுக்கு மிக நல்லது.


க்ளீட்டஸ் -- ஆகையால், இன்றைய நிகழ்ச்சியில், நேயர்களுக்கு சிவப்பு முள்ளங்கி இடம்பெறும் உணவு வகையை அறிமுகப்படுத்துகின்றோம்.
வாணி -- ஆமாம், முதலில் தேவைப்படும் பொருட்கள் பற்றி கூறுவேன்.


சிவப்பு முள்ளங்கி 200 கிராம்.
பட்டாணி 200 கிராம்
இஞ்சி 2 துண்டு
உப்பு 5 கிராம்
காடி ஒரு தேக்கரண்டி
உணவு எண்ணெய் 30 மில்லி லிட்டர்


க்ளீட்டஸ் -- சிவப்பு முள்ளங்கி போல பட்டாணியில் வைட்டமின் ஏ என்னும் ஊட்டச்சத்து அதிகம். இவை இரண்டும் அடிக்கடி சாப்பிடடுவது கண்களுக்கு மிகவும் நல்லது.


வாணி -- முதலில் சிவப்பு முள்ளங்கியை பட்டாணி அளவுடைய சிறு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு, அடுப்பின் மீது வாணலியை வைத்து, இதில் நீரை ஊற்றவும். நீர் சூடான பின், நறுக்கப்பட்ட சிவப்பு முள்ளங்கியையும் பட்டாணியையும் வாணலியில் கொட்டவும். சுமார் 1 நிமிடத்துக்குப் பின், இவற்றை வெளியே எடுக்க வேண்டும்.


க்ளீட்டஸ் -- இப்படி செய்த பிறகு, இவ்விரண்டு காய்களின் நிறம் மேலும் அழகாக இருக்கும். சிவப்பு முள்ளங்கியின் சிவப்பு நிறம், பட்டாணியின் பச்சை நிறம் ஆகியவற்றைப் பார்த்தால், உட்கொள்ளும் போது மனநிலை சிறப்பாக இருக்கும்.


வாணி -- நல்ல மனநிலையில் ஊட்டச்சத்தைச் சிறப்பாக உடம்பில் சேர்க்கலாம்.
அடுத்து, வெறும் வாணலியை மீண்டும் அடுப்பின் மீது வைத்து, இதில் 30 மில்லி லிட்டர் உணவு எண்ணெய் ஊற்றவும். இஞ்சி துண்டுகளை இதில் கொட்டலாம். மணம் வந்த பிறகு, சிவப்பு முள்ளங்கி, பட்டாணி ஆகியவற்றையும் இதில் கொட்டலாம். நன்றாக வதக்கவும்.


க்ளீட்டஸ் -- இறுதியில், காடி, உப்பு ஆகியவற்றை வறுவலில் சேர்க்கவும். வதக்கிய பிறகு, இன்றைய சிவப்பு முள்ளங்கி, பட்டாணி வறுவல் தயார்.


வாணி -- செய்முறை மிகவும் எளிமையானது. நேயர்களே, நீங்கள் வீட்டில் தயாரித்து ருசிபாருங்கள்.


வாணி -- சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் தங்களுக்கு அதிக சீன உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். வீட்டில் சீன உணவு வகையைத் தயாரிப்பது பற்றி நீங்கள், ஓரிரு வரிகள் எழுதி, எங்களுக்கு அனுப்புங்கள்.


க்ளீட்டஸ் -- வாணி, அடுத்த வாரம் எந்த உணவு வகையை நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்.


வாணி -- அடுத்த முறை, மீன் இறைச்சி வறுவல் பற்றி நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம். ஆர்வம் கொண்ட நேயர்கள் வீட்டில் , ஒரு ஆற்றுமீன், காளாண், சர்க்கரை, கோழி சூப்,இஞ்சி, சமையல் மது, உப்பு முதலியவற்றை முன் கூட்டியே தயார் செய்து வைக்கலாம்.