இன்று நடைபெற்ற சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் 9வது மக்கள் பேரவை முதல் கூட்டத்தின் 4வது முழு அமர்வில், தன்னாட்சிப் பிரதேசத்து மக்கள் பேரவை நிரந்தர கமிட்டித் தலைவராக, Legqogகும், தன்னாட்சி பிரதேசத்தின் தலைவராக, Qiangba Puncogகும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Qiangba Puncog, அரசு பணியறிக்கையை வழங்கிய போது, கடந்த ஐந்து ஆண்டுகள், திபெத் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்த, விவசாயிகளும் ஆயர்களும் மிக அதிகமான நலனைப் பெற்ற ஐந்து ஆண்டுகளாகும் என்று தெரிவித்தார். முழுப் பிரதேசத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, ஆண்டுக்கு சராசரி 12 விழுக்காடாக அதிகரிப்பது, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் ஆண்டு நபர்வாரி நிகர வருமானம் 13 விழுக்காடாக அதிகரிப்பது, சீரான காற்று மற்றும் நீர் தரத்தை நிலைநிறுத்துவது, சமூகம், மேலும் இணக்கமாகவும் நிதானமாகவும் இருப்பது ஆகியவை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், திபெத்தின் முக்கிய இலக்குகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
|