கடந்த சில ஆண்டுகளில், உயிரின எரியாற்றல் வளர்ச்சி மாதிரியை திபெத் தன்னாட்சிப் பிரதேசம் ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறது. கிராமப்புறங்களில் விறகு எரியாற்றலுக்கு பதிலான திட்டப்பணியை செயல்படுத்துவதன் மூலம், ஒரு லட்சத்து 20ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் தூய்மையான எரியாற்றலை பயன்படுத்தலாம். இத்திட்டப்பணிகளின் மூலம், கிராமப்புறங்களில் உயிரினச்சுற்றுச்சூழல், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை நிலை ஆகியவை மேம்படுத்தப்படும் அதே வேளையில், வேளாண் மற்றும் கால் நடை வளர்ப்புக் கட்டமைப்பில் சீர்திருத்தமும் காணப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களின் பிடி, மர வளத்துக்கு பதிலான மீத்தேன் வாயு, சூரிய வெப்ப ஆற்றல்,காற்றாற்றல் மின்சார வசதிகள் ஆகியவற்றின் கட்டுமானத்துக்கான உதவித் தொகை 14கோடி யுவானுக்கு மேலாகும். முழுப் பிரதேசத்திலும் 25லட்சத்துக்கு மேலான மக்கள் சூரிய வெப்ப ஆற்றல் வசதிகளை கொண்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.
|