• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-23 09:43:40    
யார் அழகானவர்?

cri
ச்சி நாட்டின் நிலக்கிழாரான ஸோ ஜி பார்ப்பதற்கு பொலிவான தோற்றமுடையவர். ஆறடி உயரமும் அதற்கேற்ற உடல்வாகுமாக ஸோ ஜி அழகான ஆண்மகனாக காட்சியளித்தார். ஒருநாள் நல்ல ஆடைகளை அணிந்து கண்ணாடியின் முன் நின்று, அதில் தெரிந்த தனது பிம்பத்தை பார்த்து இரசித்தபடி யோசித்து கொண்டிருந்தான் ஸோ ஜி. பின் தன் மனைவியிடம் சென்று, சரி, இதற்கு பதில் சொல், யார் அதிகம் அழகானவர், வட நகரின் நிலக்கிழாரான சூவா அல்லது நானா? என்று கேட்டான் ஸோ ஜி.
இதைக் கேட்ட அவனது மனைவி கொஞ்சம்கூட தயங்காமல், அன்பே, நீங்கள் எப்போதுமே மிகவும் அழகானவர். வட நகரின் நிலக்கிழாரான சூ எப்படி உங்களோடு தன்னை ஒப்பிட்டுக்கொள்ளமுடியும்" என்று கூறினாள்.
வட நகரின் நிலக்கிழாரான சூ அவனது மிகப்பொலிவான தோற்றத்திற்காக நாடு முழுதும் அறியப்பட்டவன். எனவே தனது மனைவி தன்னை அவனை விட அழகானவர் என்று சொன்னதில் நம்பிக்கையும், மனநிறைவும் கொள்ளாத ஸோ ஜி, தனது வைப்பாட்டியிடம் சென்று தன் மனைவியிடம் கேட்ட அதே கேள்வியை கேட்டு யார் அழகானவர் என்று அறிந்துகொள்ள விரும்பினான்.
பண்டைய காலத்தில் ஆண்கள் மனைவியாக ஒரு பெண்னையும், வைப்பாட்டியாக ஒரு பெண்ணையும் வைத்து குடும்பம் நடத்தினர். இருக்கும் செல்வத்துக்கேற்றபடி வைப்பாட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தது. ஆக, ஸோ ஜி, தன் வைப்பாட்டியிடம் வட நகரத்து சூவா தானா யார் அழகானவர் என்று கேட்க, அவளோ,
"எப்படி உங்களோடு சூவை ஒப்பிட முடியும்" என்று ஆரம்பித்து ஸோ ஜியை பற்றி புகழ்ந்து தள்ளினாள்.
பின்னர் தன்னை பார்க்க வந்த மாணவனிடம், யார் அழகானவர் என்று அறிய விரும்பி தனது கேள்வியை கேட்டான் ஸோ ஜி.
அதற்கு மாணவன், என்னை பொறுத்த வரை நீங்கள் தான் அதிகம் அழகானவர் என்றான்.
அடுத்த நாள் வட நகரத்து நிலக்கிழாரும் ஸோ ஜியின் மண்டையை வாட்டிய கேள்வியின் மறுபாதியுமான சூ, ஸோ ஜியை காண அழைத்தான். சூவை சென்று சந்தித்த ஸோ ஜி, கூர்ந்து கவனித்து ஆய்ந்தபின், தன்னை விட சூதான் கம்பீரமும், பொலிவும் சேர அழகுடன் காட்சி தருகிறான் என்பதை உணர்ந்துகொண்டான். வீடு திரும்பி கண்ணாடியின் தன்னை மறுபடியும் ஒருமுறை பார்த்து சூவின் தோற்றத்தோடு ஒப்பிட்டபோது, தான் அவனோடு ஒப்பிடுகையில் அவ்வளவு ஒன்றும் அழகானவனில்லை என்பது ஸோ ஜிக்கு புரிந்தது.
இரவு படுக்கையில் கிடந்தபடி நடந்தவற்றை எண்ணி பார்த்த ஸோ ஜிக்கு எல்லாம் விளங்கியது.
தனது மனைவியின் கண்களுக்கு தான் அழகாக தெரிந்ததற்கு காரணம் அவளது பார்வையில் பாரபட்சமும், பக்கசார்பும் இருந்தமையே. தனது வைப்பாட்டி தன்னை அழகானவன் என்று கூறியது தன் மீதான அச்சத்தால். தனது மாணவன் தன்னை அழகானவன் என்று கூற காரணம், அவனுக்கு என்னிடத்தில் ஆகவேண்டியது இருக்கிறது, அவனுக்கு தேவை இருக்கிறது என்பதே. புரிதல் தந்த மகிழ்ச்சியில் உறங்கினான் ஸோ ஜி.