• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-23 13:35:58    
ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகள்

cri
29வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி இவ்வாண்டு ஆகஸ்டு திங்கள் பெய்சிங்கில் நடைபெறும். ஜூன் திங்கள் முதல் செப்டம்பர் திங்கள் வரை, பெய்சிங், பல்வகை அம்சங்கள் கொண்ட நகர ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்தி, சீன மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் பெய்சிங் நகரவாசிகளுக்கும் ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகளில் கலந்துகொள்ளவும், ஒலிம்பிக் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பு வழங்கும். சீனாவின் மிகப்பரப்பிலான ஆழமான பண்பாட்டையும் "ஒரே உலகம், ஒரே கனவு" என்ற தலைப்பின் அடிப்படையில் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை நடத்திக்காட்டும் என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் அதிகாரி ஒருவர் நேற்று பெய்சிங்கில் கூறினார்.

2008ம் ஆண்டு பெய்சிங் நகர ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போதான, பெய்சிங் நகர பண்பாட்டு நடவடிக்கைகளின் ஏற்பாடு வெளியிடப்பட்டுள்ளது. ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது, பெய்சிங்கிற்கு வருகை தரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் பல்துறை அதிகாரிகள், வெளிநாட்டு பார்வையாளர்கள் ஆகியோரின் எண்ணிக்கை சுமார் 6 இலட்சமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளின் பயணிகளுக்கும் பெய்சிங் நகரவாசிகளுக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் வாய்ப்பை பயன்படுத்தி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு, சீனப் பண்பாட்டை எடுத்துக்காட்டி, பல்வேறு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டு பரிமாற்றத்தை முன்னேற்றும் வகையில், இவ்வாண்டு ஜூன் திங்கள் முதல் செப்டம்பர் திங்கள் வரை, பெய்சிங் பலநகர ஒலிம்பிக் பண்பாட்டு நடவடிக்கைகளை நடத்தும்.
பண்பாட்டு நடவடிக்கைகள் ஒலிம்பிக் நடவடிக்கைகளின் முக்கிய பகுதியாகும். அத்துடன், உபசரிப்பு நாட்டின் பண்பாட்டை, பல்வேறு நாடுகளுக்கிடையிலான பண்பாட்டு பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய முக்கிய மேடை இதுவாகும் என்று பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பண்பாட்டு நடவடிக்கை ஆணையத்தின் தலைவர் Zhao Dongming தெரிவித்தார்.

2008ம் ஆண்டு வென்பிரிஸ்னோக் ஸ்னூக்கர் போட்டி, இன்று விடியற்காலை முடிவடைந்தது. பிரிட்டன் வீரர் Mark Selby, 10-3 என்ற ஆட்ட கணக்கில், சக நாட்டு வீரர் Stephan Leeயை தோற்கடித்தார். அவர் சாம்பியன் பட்டம் பெறுவது, இதுவே முதன்முறையாகும்.
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது என்றும் சீனாவில் 10 பேர் மட்டமே, அதை அறித்துள்ளனர் என்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தொடக்க மற்றும் நிறைவு விழா பணியகத்தின் துணைத் தலைவர் zhu hong இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.
முந்தைய எல்லா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியிலும் தொடக்க விழாவில், மக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்துள்ளது. தீபத்தை ஏற்றும் வழிமுறை என்பது குறிப்பிடதக்கது.