
மேற்கு மலைகள், ஒரு அழகான காட்சியாகும். சாந்தி அழகுப் பூங்கா என முன்னர் அழைக்கப்பட்ட சுகந்த மலைப் பூங்கா, சிங் வம்ச காலத்தில் முடியரசின் சொத்தாக இருந்தது. 1600 ஹெக்டர் பரப்புடைய அதன் சிகரம், கடல் மட்டத்திலிருந்து 550 மீட்டர் உயரம் உடையது.

தளவரிசையிட்ட பாதை ஒன்று, மலையின் மேலுள்ள அமைதியும் நேர்த்தியும் நிறைந்த சுவாங் சிங் மாளிகைக்கு இட்டுச் செல்கின்றது. அங்குத் தெளிந்த நீரூற்றுகள் இரண்டு உள்ளன. மறைந்த தலைவர் மா சே துங், 1949இல் பெய்சிங் விடுதலை செய்யப்பட்ட பின், நாடு வழி நடத்தினார்.

புராதன காலம் முதல், இச்சுகந்த மலைச் செந்தளிர்கள் பற்றி, புலவர்களும் அறிஞர்களும் கவிகள் பாடிப் பாராட்டியுள்ளனர். அவற்றில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. தாங் வம்ச காலத்தில் 9ஆம் நூற்றாண்டுக் கவிஞர் டூ மூ பாடிய " மலைக்கு ஒரு பயணம் " என்ற கவிதையாகும். அதன் இரண்டு அடிகள் பின்வருமாறு :

" இலையுதிர்காலப் பிற்பகுதியில், எனது தேரிலிருந்தே இனிமையான தளிர்களை அனுபவிக்கின்றேன். மாசி மாத மலர்களை விட அவை பன்மடங்கு அழகானவை. "
|