• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-24 15:27:49    
எந்த நிலையில் உள்ள பெய்ஜி போக்குவரத்து

cri

கலை.........வணக்கம் நேயர்களே. இப்போது கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி நேரம். இவ்வாண்டில் நானும் தமிழன்பனும் தொடர்ந்து உங்களுக்கு கேள்வியும் பதிலும் நிகழ்ச்சி வழியாக சேவை புரிய இருக்கின்றோம். கடந்த ஆண்டில் உங்களுடைய நிறைவான ஒத்துழைப்போடு கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியை நன்றாகவே நடத்தினோம். ஆகவே இவ்வாண்டில் தொடர்ந்து உங்கள் ஒத்துழைப்பில் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
தமிழன்பன்..........சரி, கேள்விக்கு பதில் அளிக்கும் இந்நிகழ்ச்சியில் சிறுநாயக்கண்பட்டி கே வேலுச்சாமியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் கேட்ட கேள்வியை தேர்வு செய்து பதிலளிக்கலாமா?
கலை........சீனத் தலை நகரான பெய்ஜிங்கில் பயணிகளின் அன்றாட பயணத்திற்கு வசதியாக சீன அரசு நாள்தோறும் எத்தனை பேருந்துகளை இயக்குகின்றது என்று அவர் வினா எழுப்பியுள்ளார்.
தமிழன்பன்.......அப்படியிருந்தால் நாம் பெய்ஜிங் போக்குவரத்து வசதி நிலைமையை முதலில் பார்க்கலாமா?
கலை...... தயங்கமே இல்லை. நிச்சயமாக போக்குவரத்து வசதி பற்றி பார்ப்போம்.
தமிழன்பன்.........கலை இவ்வாண்டு 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் ஆண்டாகும்.
கலை.......ஆமாம். இந்த ஒலிம்பிக்கை வெற்றிகரமாக நடத்தும் வகையில் பெய்ஜிங் மாநகர அரசு நகர போக்குவரத்து கட்டமைப்பை விரைவுபடுத்தியுள்ளது.
தமிழன்பன்.........இதுவரை பெய்ஜிங் மாநகரில் எத்தனை போக்குவரத்துக்கு நெறிகள் அல்லது வழிகள் உள்ளன?
கலை.......தற்போது பெய்ஜிங் மாநகரில் சுமார் 1043 போக்குவரத்து நெறிகள் மூலம் மக்கள் நாள்தோறும் பயணம் செய்கின்றனர்.
தமிழன்பன்........மொத்தமாக எத்தனை பேருந்துகள் இந்த நெறிகளில் இயக்கப்படுகின்றன?
கலை.......மொத்தம் 9400 பேருந்துகள் பெய்ஜிங் மாநகரில் இயக்கப்படுகின்றன.
தமிழன்பன்........நகரத்தில் ஒவ்வொரு நாளும் போக்குவரத்துக்கு இயங்குகின்ற பேருந்துகள் தவிர வேறு போக்குவரத்து வழி முறைகள் ஏதாவது உள்ளதா?


கலை......நகரில் சாலையிலான போக்குவரத்து நெறிகள் தவிர, தரையடியிலுள்ள தொடர் வண்டிகள் இருப்புப் பாதை நெறிகள் உள்ளன. இதுவரை பெய்ஜிங் மாநகரில் 13 சுரங்க இருப்புப் பாதைகள் கட்டியமைக்கப்பட்டுள்ளன.
தமிழன்பன்.........எனக்கு தெரிந்த அளவில் நமது சீன வானொலி கட்டிடத்தின் பக்கத்தில் முதலாவது சுரங்க இருப்பு பாதை செல்கின்றது. நாங்கள் டியன் ஆன் மன் சதுக்கத்திற்கு செல்ல வேண்டுமானால் இந்த முதலாவது சுரங்க இருப்புப் பாதை மூலம் 30 நிமிடம் பயணம் மேற்கொள்ள வேண்டும்.
கலை.......நீங்கள் குறிப்பிட்டது மிகவும் சரி. 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்காக அனைத்து விளையாட்டு அரங்குகளுக்கும் செல்வதற்கு வசதி வழங்கும் வகையில் 8வது ஒலிம்பிக் நெறி குறிப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழன்பன்.........இவைகள் தவிர நகரின் கிழக்கு எல்லையிலிருந்து மேற்கு எல்லைக்குச் செல்லும் நெறிகள் எதாவது உண்டா?
கலை.......உண்டு. இவை தவிர, சுரங்க பாதையின் வழியாக ஸஹெய், சுன்சியாச்சுவான், வுவாங்சின், பின்கோ முதலிய சுங்கப் பாதை நிறுத்தங்கள் நவீன வசதிகளோடு கட்டியமைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.
தமிழன்பன்.........நகரின் மையத்திலான போக்குவரத்து வசதியில் மற்ற மாநகரங்களை விட பெய்ஜிங் மாநகரம் சிறப்பாக உள்ளது. அதனை சுற்றியுள்ள புற நகர் பகுதிகளில் போக்குவரத்து வசதிகள் எப்படி?


கலை......அதுவா?111வது தேசிய நெடுஞ்சாலை பெய்ஜிங்கிலிருந்து லியான்சியான் மாவட்டத்துக்குச் செல்லும் நெடுஞ்சாலை, பாத்தாலியனை கடந்து செல்லும் நெடுஞ்சாலை, நகரை சுற்றி செல்லுகின்ற 101 நெடுஞ்சாலைகள், வட்டங்களிடையில் செல்கின்ற 39 நெடுஞ்சாலைகள் ஆகியவை உயர் தரமான நெடுஞ்சாலைகளாக மேம்படுத்தி அல்லது மாற்றுவதை முக்கியமாக கொண்டு, புற நகரங்களுக்கும் மாவட்டங்களுக்குமிடையிலான நெடுஞ்சாலைகளின் கட்டுமானத்தை பெய்ஜிங் மாநகர போக்குவரத்து துறை விரைவுப்படுத்த உள்ளது.
தமிழன்பன்.........இதற்கிடையில் தலை நகரில் வேறு எதாவது புதிய போக்குவரத்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?

கலை....... நெடுஞ்சாலைகளை உயர் நிலைக்கு சீர்ப்படுத்தும் அதேவேளையில் நகரில் 200 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலைகள் செப்பனிடப்பட உள்ளன. 79 பழைய பாலங்களை வலுப்படுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராமங்களுக்கிடையில் 400 கிலோமீட்டர் நீளமான நெடுஞ்சாலை மேம்படுத்தப்படுகிறது.

தமிழன்பன்.........நகர போக்குவரத்து நிலைமையை உயர்த்தும் வேளையில் சேவை தரதை உயர்த்த வரையறைகள் வகுர்ரப்பப்ட்டுள்ளனவா?
கலை.......இது பற்றி பெய்ஜிங் மாநகர அரசு நுணுக்கமான ஏற்பாடுகளை செய்துள்ளது. 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் போது ஒலிம்பிக்கிற்கு சேவை புரியும் வகையில் 6 முக்கிய பேருந்து தங்குமிடங்கள் புதிதாக கட்டியமைக்கப்படும். பெய்ஜிங் சர்வதேச விமான நிலையத்தின் வெளியேற்ற வளாகத்தில் வாடகை கார்களுக்கான சிறப்பு நிறுத்த வளாகம், ஒலிம்பிக் காட்டு பூங்காவில் பேருந்து சிறப்பு நிறுத்த இடங்கள் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழன்பன்.........பெய்ஜிங் மாநகரின் போக்குவரத்து பற்றி விளக்கிய பின் பெய்ஜிங் மாநகரின் போக்குவரத்து வசதி நிலைமை குறித்து அறிந்து கொண்டுள்ளோம்.