• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-24 13:53:02    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு பங்காற்றும் சீன பெண்மணிகள் சிலர்

cri
பெய்சிங்கின் ஒரு பண்பாட்டு மற்றும் விளையாட்டு மையத்தில், ஆங்கில மொழியில் அன்னிய சுற்றுலா பயணிகளின் கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று ஒரு இளைய பெண் ஆசிரியர், மாணவிகளுக்கு கற்பிக்கின்றார். இந்த வகுப்பில் 40-50 மாணவர்கள் இருக்கின்றன. மாணவர்களின் சராசரி வயது, 59 வயதாகும்.
பெய்சிங் மாநகர அரசின் திட்டத்தின் படி, 2008ம் ஆண்டு பெய்சிங்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறும் போது, 40முதல் 60 லட்சம் வரையான பெய்சிங் நகரவாசிகள் ஆங்கில மொழி பேச முடியும். இந்த எண்ணிக்கை பெய்சிங்கின் மொத்த மக்கள் தொகையில் 30 விழுக்காடு வகிக்கிறது. இந்த இலக்கை நிறைவேற்றும் வகையில், பெய்சிங் அரசு அரசு சாரா மொழி பள்ளிகளுடன் ஒத்துழைத்து, சில தொண்டர் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தது.

இவ்வாண்டு 58 வயதான மூதாட்டி ஹூ, சில எளிதான ஆங்கில சொற்களை கற்றுக்கொண்டது தவிர, 2008ம் ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியுடன் தொடர்புடைய சில ஆங்கில வாக்கியங்களை சொல்ல முடியும்.
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, சிலரின் வாழ்க்கையை மாறியுள்ளது. இவ்வாண்டு 47வயதான சாங் ச்சியே சூ, சீனாவின் ஹேநான் மாநிலத்தின் கை வேங் நகரத்தில் வேலை இழந்த ஒருவராவார். பூத்தையல் திறமை கொண்ட அவர் சுயமாக bian பூத்தையல் வேலை என்னும் கலைப்பொருள் தொழிற்சாலை ஒன்றை நிறுவினார். 2008ம் ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான ஆயத்த பணியுடன், bian பூத்தையல் வேலை, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் நுழைய வேண்டும் என்ற கருத்து அவருடைய மனதில் தோன்றியது. விடா முயற்சியுடன், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான சிறப்பாக அனுமதிக்கப்பட்டுள்ள வணிக பொருட்களின் வணிகராக அவர் மாறினார், இதை குறித்து பேசுகையில் அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இது தவிர, அவர் ஹேநான் மாநிலத்தில் வேட்பாளர் முறையில் ஒலிம்பிக தீபத் தொடரோட்டத்தில் ஒருவராக தேர்தெடுக்கப்பட்டார்.

பல சீனர்களை பொறுத்த வரை, 2007ம் ஆண்டை மறந்து விடுவது கடினம். பலர் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். சீன பெண்மணிகள் பலர் தத்தமது முயற்சியுடன் இதில் ஈடுபடுகின்றனர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வெற்றிகரமாக நடைபெறுவது உறுதி என்று நம்புகிறோம்.