|
ஸ்பெயின் கால்பந்தாட்ட மன்றங்களிடை போட்டி
cri
|
 2007-2008 ஆண்டுக்கான ஸ்பெயின் கால்பந்தாட்ட மன்றங்களுக்கிடையிலான போட்டியின் 20வது சுற்றின் அனைத்து ஆட்டங்களும் 21ம் நாள் முடிவடைந்தன. போட்டியின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள அணியின் வீரர்களான Ruud van Nistelrooy, Raul Gonzalez ஆகியோர் அடித்த கோல்கள் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் Atletico Madrid அணியை ரியர் மாட்ரிட் வென்றது. 50 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இது போட்டியின் தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது.
 ஆகஸ்டு திங்களில், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி நடைபெறயுள்ளது. ஓராண்டில் காற்று தரம் தலைசிறந்த திங்கங்களில் இது ஒன்றாகும். பெய்சிங் மாநகர சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் துணைத் தலைவர் Du Shaozhong அண்மையில் இவ்வாறு தெரிவித்தார். ஆகஸ்டு திங்கள், பெய்சிங்கில் மாசுபாடான காற்று வெளியேற்றப்பட்டு தூய்மையான, சிறப்பான காற்று புழக்க தன்மை கொண்டது என்று Du Shaozhong கூறினார். புள்ளிவிபரங்களின் படி, 2006ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில், பெய்சிங்கில் 30 நாட்களின் காற்றுத் தரம் வரையறையை எட்டியுள்ளது. கடந்த ஆகஸ்டு திங்களில், பெய்சிங்கில் 28 நாட்களின் காற்றுத் தரம் வரையறையை எட்டியது என்றார் அவர். ஒலிம்பிக் விளையாட்டு போட்டி
 சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் சீன ஒலிம்பிக் குழுயின் ஏற்பாட்டில் "2008 ஒலிம்பிக் நுண்கலை மாநாடு" என்ற நடவடிக்கை இன்று பெய்சிங்கில் துவங்கியது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் பண்பாட்டு விழாவின் பல நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். கலை, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு மேலும் மெருகு ஊட்டுகிறது என்பது இதன் முக்கிய கருவாக அமைகிறது. 80 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த புகழ் பெற்ற கலைஞர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொள்கின்றார்கள். இப்படைப்புகளில், பாரம்பரிய சீன ஓவியம், எண்ணெய் ஓவியம், சிற்பக்கலை, டிஜிட்டல் கலை முதலியவை இடம் பெறுகிறன. படைப்புக்களை திரட்டும் பணி இன்று துவங்கின.
 2008ம் ஆண்டு குவாங் சோ 4 நாட்டு மகளிர் கால் பந்தாட்ட போட்டி 20ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகரில் நிறைவடைந்தது. சீன அணி இப்போட்டியில் இரண்டாவது இடம் பெற்றது. ஆட்டத்தில் அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீன அணியைத் தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன்பட்டத்தை பெற்றது. கனடா மூன்றாம் இடம் வகித்தது.
|
|