• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-25 09:15:44    
சிங்காய் மாநிலத்தில் 'பண்பாட்டின் மூலமான வருமான அதிகரிப்பு'  என்ற திட்டம்

cri
வட மேற்கு சீனாவின் சிங்காய் மாநிலம், பல தேசிய இனங்கள் குழுமி வாழும் மாநிலமாகும். இங்கு திபெத் இனம், மங்கோலிய இனம், ஹுவெய் இனம் முதலிய சிறுபான்மை தேசிய இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு தேசிய இனப் பண்பாட்டு மூலவளங்கள் மிகவும் செழிப்பானவை. கடந்த சில ஆண்டுகளாக, தத்தமது தேசிய இனப் பண்பாட்டையும் நாட்டுப்புற பழக்க வழக்கங்களையும் பயன்படுத்தி, வருமான அதிகரிப்பு வழிமுறையை நாடி, தத்தமது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதில் சிறுபான்மை தேசிய இன விவசாயிகள் மற்றும் ஆயர்களுக்கு சிங்காய் மாநில அரசு வழிகாட்டி வருகிறது. சிங்காய் மாநிலத்தின் சிறுபான்மை தேசிய இன மக்கள், தத்தமது தேசிய இனப் பண்பாட்டைக் கொண்டு, எவ்வாறு செல்வமடைந்துள்ளனர் என்பது பற்றி அறிமுகப்படுத்துகின்றோம்.


சிங்காய் மாநிலத்தின் Ping An மாவட்டத்தில் A Yi Sai Mai என்னும் தேசிய இன ஆடல் பாடல் குழு இருக்கிறது. 2004ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இக்குழுவில், திபெத் மற்றும் மங்கோலிய இனங்களைச் சேர்ந்த உள்ளூர் பிரதேசத்தின் இளைஞர்கள் இடம்பெறுகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக, நாடு முழுவதிலும், இந்த ஆடல் பாடல் குழு, கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளது. இக்குழு உருவாக்கப்பட்ட துவக்கத்தில், 66 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். தற்போது, 520 உறுப்பினர்கள் உள்ளனர். குழுவினரின் வருமானம் பெருமளவில் உயர்ந்துள்ளது. இக்குழுவை உருவாக்கியவரும், Ping An மாவட்டத்தின் அதிகாரியுமான Wang Xuan De பேசுகையில், சி்ங்காய் மாநிலத்தில் உள்ள சில நகரங்களில், திபெத் மற்றும் மங்கோலிய இன பாடல்களையும் நடனங்களையும் இக்குழு அரங்கேற்றியுள்ளது என்றும், இவை பெரும் வரவேற்பு பெற்றுள்ளன என்றும் தெரிவித்தார். அவர் கூறியதாவது;

"ஆடல் பாடல் குழு, சில நாட்களில், 12 ஆயிரம் யுவானை ஈட்டியுள்ளது. ஊர் திரும்பியப் பின், குழுவினர் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். "பண்பாட்டின் மூலம் வருமான அதிகரிப்பு" என்ற திட்டத்தின் மூலம், எங்கள் குழந்தைகள், பயிற்சிகள் மற்றும் நலன்களைப் பெற்றுள்ளனர் என்று கூறி, அவர்களின் குடும்பத்தினர்கள் பெரும் பெருமை கொள்கின்றனர்" என்றார், அவர்.


சிங்காய் மாநிலம், சீனாவில் நீர் வளம் மிக்க இடமாகும். இம்மாநிலத்தில் பரந்த கால்நடை வளர்ப்புப் பிரதேசங்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், இயற்கைச் சீற்றங்கள், அளவுக்கு மீறி ஆடுமாடுகளை மேய்ப்பது ஆகிய காரணங்களால், கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களின் உயிரின வாழ்க்கைச் சூழல் குறிப்பிட்ட அளவில் சீர்குலைக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு முதல், "மேய்ச்சல் நிலங்களில் புற்களை வளர்ப்பது" என்ற திட்டத்தை சிங்காய் மாநில அரசு நடைமுறைப்படுத்தி, புல்வெளியில் வாழ்கின்ற திபெத் மற்றும் மங்கோலிய இன ஆயர்கள், நகரங்களுக்குக் குடிபெயர ஊக்கமளித்துள்ளது. இந்த ஆயர்கள், புதிய வாழ்க்கையை ஏற்பதற்குத் துணை புரியும் பொருட்டு, ஒரு புறம், சிங்காய் மாநில அரசு, ஆயர்களுக்கு வீடுகளை வழங்குவதோடு, வாகனம் ஓட்டுதல், பயிரிடுதல் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் தொடர்பான பயிற்சிகளை அவர்களுக்கு அளித்துள்ளது. மறு புறம், திபெத் மற்றும் மங்கோலிய இனத்தவர்கள், ஆடல் பாடலில் தேர்ச்சி பெற்ற தனித்தன்மையை வெளிக்கொணர்ந்து, நாட்டுப்புற பழக்க வழக்கங்கள் சார்ந்த சுற்றுலா மற்றும் ஆடல் பாடல் அரங்கேற்றத்தை வளர்த்து, தேசிய இனப் பண்பாட்டைக் கொண்டு, விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானத்தை அதிகரிப்பதில் சமூகத்தின் பல்வேறு துறையினர்களை அணிதிரட்டியுள்ளது. மேற்கூறிய A Yi Sai Mai ஆடல் பாடல் குழு, தேசிய இனப் பண்பாட்டைப் பயன்படுத்தி, உள்ளூர் ஆயர் குடும்பங்களி்ன் வருமானத்தை அதிகரிப்பதில் வெற்றி பெற்றுள்ளது.
"பண்பாடு மூலமான வருமான அதிகரிப்பு" என்ற திட்டம் மூலம், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வருமானம் அதிகரித்துள்ளது. அரசும், சில அரசு சாரா அமைப்புகளும் இத்திட்டத்துக்கென முயற்சி மேற்கொண்டுள்ளன. சிங்காய் மாநிலத்தின் பண்பாட்டுத் துறை, திபெத் மற்றும் மங்கோலிய இன இளைஞர்களுக்கு தேசிய இன நடன வகுப்புகளை இலவசமாக நடத்துகிறது. இதற்கிடையே, தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்துக்கு உதவித் தொகையை வழங்கியுள்ளன. 2007ஆம் ஆண்டுக்கான தேசிய இன ஆடல் பயிற்சி, சிங்காய் மாநிலத்தின் Da Wu Tai அரங்கேற்ற மற்றும் ஆடை நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அரசு சாரா நிறுவனத்தின் மேலாளர் Wang Xiao Bo கூறியதாவது:
"சிங்காய் மாநிலத்தில், செழிப்பான தேசிய இன ஆடல் பாடல் மூலவளங்கள் காணப்படுகின்றன. இவற்றை வளர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்புப் பிரதேசத்திலான சிறுபான்மை தேசிய இனத்தவர்களைப் பயிற்றுவித்து, அவர்களின் ஆடல் பாடல் திறமையை வளர்த்து, அவர்களின் பண்பாட்டு அறிவை அதிகரிப்பது, வேலை வாய்ப்பு பெறுவதில் அவர்களின் திறனை உயர்த்தும். இதற்கிடையில், இத்தகைய பயிற்சி சிங்காய் மாநிலத்தின் தேசிய இனப் பண்பாட்டு மூலவளத்தை வளர்த்து, சிங்கியாங்கில் போட்டியாற்றல் மிக்க தலைசிறந்த பண்பாட்டை வளர்ப்பதற்கும் உதவும்" என்றார், அவர்.


பயிற்சி அளிக்கும் கடமை எளிதானதல்ல. சிங்காய் மாநிலத்தின் பண்பாட்டுத் துறையின் கோரிக்கையின் படி, ஒரு மாதக்காலத்துக்குள், மாணவர்கள் பல ஆடல்களைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். கால்நடை வளர்ப்புப் பிரதேசங்களிலிருந்து வந்த இளைஞர்கள் குறுகியக் காலத்தில், பல வகை நடனங்களைக் கற்றுத் தேர்வதற்குத் துணை புரிய, மங்கோலிய இன நடன ஆசிரியர் Bao Gui Hua அம்மையாருக்கு வழிமுறைகள் கிடைத்தன. அவர் கூறியதாவது:
"பொதுவாகக் கூறின், நாங்கள் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கின்றோம். மாணவர்கள் ஆடுவதில் முன்னேற்றம் கண்டால், உடனே அவர்களை நான் பாராட்டுகின்றேன். இதன் மூலம் அவர்களின் நம்பிக்கை வலுப்படலாம்" என்றார், அவர்.