• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-25 18:43:23    
சீனாவின் நாசி இனம்

cri

நாசி இனமக்கள் முக்கியமாக சீனாவின் Yunnan மாநிலத்தின் Lijiang நாசி இனத் தன்னாட்சி மாவாட்டத்தில் கூடி வாழ்கின்றனர். மற்றொரு பகுதியினர் Yunnan மாநிலத்தின் Weixi, Zhongdian, Ninglang, Deqin ; Sichuan மாநிலத்தின் Yanbian, Yanyuan, Muli, Xizang மாநிலத்தின் Zhikang முதலிய மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகை 2 லட்சத்து 78 ஆயிரத்து ஒன்பதாகும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், நாசி இன மக்கள் தம் இனத்தின் பெருமதிப்புள்ள பண்பாட்டு மரபு செல்வங்களைப் படைத்தனர். இச்செல்வங்களில் துங்பா சித்திர எழுத்துக்களும், இவ்வெழுத்துகளால் இயற்றப்பட துங்பா திருமறை நூல், அடங்குகின்றன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பரந்து வரும் 20ஆயிரத்துக்கு அதிகமான துங்பா திருமறை நூலின் தொகுதிகளில், நாசி இனமக்களுடன் தொடர்புடைய வெவ்வேறான அறிவுகளும், குறிப்பிடப்படுகின்றன.

 இவை அறிவாளர்களால் நாசி இனத்தின் பழங்கால வாழ்க்கை பற்றிய கலைக்களஞ்சியமாகப் போற்றப்படுகின்றன.
நாசி இன மக்கள் முக்கியமாக வேளாண்மையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக நெல், மக்காச்சோளம், கோதுமை, பருத்தி, கரும்பு, உருளைக்கிழங்கு முதலியவற்றைப் பயிரிடுகின்றனர். கால்நடை வளர்ப்பு துறையிலும், கைவினைத் தொழிலிலும், வளர்ச்சி காணப்படுள்ளது. Lijiang குதிரை என்னும் தொழில் நிறுவனம் நாடெங்கும் புகழ்பெற்றதாகும். தற்போது, பழுது பார்த்தல், நிலக்கரி அகழ்வு, மின்சார உற்பத்தி, வேதியல் உரம், மின்னாக்கி, மென்ரகத் தொழிற்துறை முதலிய துறைகளை, தொழில் நிறுவனங்கள் நடத்துகின்றன. இத்துடன், JinSha ஆற்றின் இரு கரைகளிலும், பல்வகை மூலிகைகள் விளைகின்றன.


நாசி இனத்தின் கைவினைத் தொழில் நன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. சமையறை கருவிகள் பல, கையால் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் வெண்கலக் கருவிகளின் தயாரிப்பு, வாழையடி வாழையாக நிலவி வருகின்றது. தவிர, வெள்ளிபதித்த மரப் பாத்திரமும், மர சாப்ள்டிக்ஸ் என்னும் குச்சிகளும், பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நாசி இன மக்களில் பெரும்பாலானோர் துங்பா மதத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களாவர். வசந்த விழா, Qingming பண்டிகை, Duangyang பண்டிகை, நிலா விழா, தீப்பந்த விழா, 3வது மாதத்தின் டிராகன் கோயில் திருவிழா, 7வது மாதத்தின் குதிரைவிழா முதலிய விழாக்கள், இவர்களின் முக்கியமான விழாக்களாகும்.


நாசி இன ஊரின் வாசலில் குதிரையிலிருந்து இறங்க வேண்டும். குதிரையை சொர்க்கம் நோக்கி வழிபடும் இடத்தில் கட்டி வைக்கக்கூடாது. கொர்க்கம், மூதாதையர்கள், போராட்டத் தெய்வம் ஆகியவற்றுக்கான கொண்டாட்டங்களை, மற்றவர் காண்பது, தடைச்செய்யப்படுள்ளது. நாசி இன வழக்கத்தில் இழுவை மாடுகளையும், பொருள்களைச் சமக்கும் குதிரைகளையும், விடியலை அறிவிக்கும் சேவல்களையும் கொல்லக் கூடாது. நாயின் இறைச்சியை உண்ணக் கூடாது.