கடந்த 5 ஆண்டுகளில், வேளாண் துறை, கிராமப்புறங்கள், விவசாயிகள் ஆகியவற்றுக்கு சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசம் செய்துள்ள முதலீட்டுத் தொகை 1650கோடி யுவானை எட்டியுள்ளது. முந்தைய 5 ஆண்டுகளில் இருந்ததை விட, இது 1.3 மடங்கு அதிகமாகும். விவசாயிகள் மற்றும் ஆயர்களின் வாழ்க்கை நிலை தெளிவாக மேம்பட்டதோடு, அவர்களது வருமானமும் பெரிதும் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு, திபெத் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் சராசரி வருமானம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக 10விழுக்காடு என்ற மேகத்தில் அதிகரித்து வருகிறது. தவிர, 2006ம் முதல், விவசாயிகள் மற்றும் ஆயர்களின் குடியிருப்பு வசதியை மேம்படுத்தும் திட்டப்பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக, 5இலட்சத்தும் 70ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் தன் பாதுகாப்பான சொகுசான வீடுகளில் வசிக்கின்றனர்.
இவ்வாண்டில், இத்துறைகளுக்கு மேலும் 200கோடிக்கு அதிகமான யுவானை, திபெத் முதலீடு செய்யும் என்று அறியப்படுகிறது.
|