• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-28 09:35:28    
இரு கரைகளின் பண்பாட்டுப் பரிமாற்றம்

cri

2008ம் ஆண்டு ஜனவரி திங்கள் முதல் நாள் தொடக்கம், சீனப் பெருநிலப்பகுதியும் தைவானும் கூட்டாக ஒத்துழைத்துத் தயாரிக்கும் தொலைக்காட்சி நாடகங்கள், பெருநிலப்பகுதி அரசின் தொடர்புடைய வாரியங்களால் பரிசோதனை செய்யப்பட்ட பின், பெருநிலப்பகுதி தயாரிப்பு தொலைக்காட்சி நாடகங்களை போன்றே வினியோகிக்கப்பட்டு ஒளிபரப்படலாம். இரு கரைகளுக்கிடையில் நாளுக்கு நாள் சுறுசுறுப்பாகி வரும் பண்பாட்டுப் பரிமாற்றத்தில் இது புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. சீனத் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பணியகம் அண்மையில் இதை அறிவித்தது.

கடந்த 80ம் ஆண்டு முதல், தைவான் தயாரித்த 'jiduxiyanghong',' chunquchunyoulai ','ஆறு கனவுகள் ' போன்ற தொலைக்காட்சி நாடகங்கள் பெருநிலப்பகுதியில் ஒளிபரப்பட்டன. இத்தொலைக்காட்சி நாடகங்கள், பொது மக்களால் மிகவும் ஆரவாரமாக வரவேற்கப்பட்டன. அதே வேளையில், அவை அதிகமாகக் கண்டுகளிக்கப்படும் விகிதங்களைப் படைத்தன. இதற்குப் பின், இரு கரையின் தொலைக்காட்சி நாடகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் பல்வேறு துறைகளில் ஒத்துழைத்து வருகின்றனர். பெருமளவில் பரவாகியுள்ள தொலைக்காட்சி நாடகங்களை அவர்கள் கூட்டாகத் தயாரித்துள்ளனர்.

சீனத் தேசிய வானொலி, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பணியகம் தொடர்புடைய கொள்கைகளைச் சரிப்படுத்தியதற்குப் பின், இரு கரைகளும் கூட்டாகத் தயாரிக்கும் தொலைக்காட்சி நாடகங்கள், வினியோகம், ஒளிபரப்பு முதலிய துறைகளில், பெருநிலப்பகுதி தயாரிப்பு தொலைக்காட்சி நாடகங்களை ஒத்த அணுகு முறையைப் பெறலாம். புதிய கொள்கைகளை மேற்கொள்ளப்பட்ட பின், இரு கரைகளின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பணிகள் கூட்டாக வளர்வது முன்னேற்றப்படும்.

நண்பர்களே, தைவான் நீரிணையின் இரு கரை பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற தகவலைப் படித்த பின், உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.