• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-28 14:23:30    
ning xia hui இன தன்னாட்சிப் பிரதேசத்தின் வளர்ச்சி

cri

ning xia hui இன தன்னாட்சிப் பிரதேசம் சீனாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் மக்கள் தொகை, நிலப்பரப்பு, பொருளாதார அளவு ஆகியவற்றில் ning xia hui இன தன்னாட்சிப் பிரதேசம் சின்னஞ்சிறியதாகும். ஆனால், இப்பிரதேசம் சிறிதாக இருந்தாலும், செழுமை, வலிமை, அழகு மிக்கதாக இருப்பது என்று வளர்ச்சி குறிக்கோளைக் கொண்டுள்ளது. இன்றைய நிகழ்ச்சியில், ning xiaயின் வளர்ச்சிப் பாதை பற்றி ning xia hui இன தன்னாட்சிப் பிரதேசத்தின் தற்காலிகத் தலைவர் wang zhenwei கூறியதைக் கேட்க இருக்கின்றோம். பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்கள், கையோடு கை கோர்த்து, புத்தாக்க ரக ning xiaவை உருவாக்குவது பற்றி அவர் கூறினார்.


எண்ணிக்கையும் நிலவியல் அமைவும் ning xiaயின் முழு தோற்றத்தை வெளிப்படுத்த முடிய வில்லை. பண்டைக்காலம் தொட்டு, ning xia, பல்வேறு தேசிய இனங்கள், ஒன்றிணைந்த பண்பாடு, எழில் மிக்க வளமான நிலம் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டது. ning xia hui இன தன்னாட்சிப் பிரதேசத்தின் தற்காலிகத் தலைவர் wang zhenwei, ning xia பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் தமது பிறந்த ஊர், தமது பார்வையில், அழகமாகவும் அற்புதமாகவும் இருக்கின்றது என்றார். அவர் கூறியதாவது:

"ning xia, ஒரு அழகமான அற்புதமான இடமாகும். அது சிறிய பிரதேசமாக இருந்தாலும், வளமான மூல வளம் கொண்ட மாநிலமாகும். முதலாவதாக, வேளாண் மூல வளத்தின் மேம்பாடு, முக்கிய முனைப்பாக உள்ளது. இரண்டாவதாக, சீன அளவில் நபர்வாரி நிலக்கரி உற்பத்தித் அளவில், மூன்றாவது இடமும் நபர்வாரி மின்சார உற்பத்தி அளவில், முதல் இடமும் வகிக்கின்றது. ning xia, பழங்காலபண்பாடு வாய்ந்த ஒரு இடமாகும். இதனால், பல சுற்றுலா இடங்கள் உருவாகியுள்ளன." என்றார் அவர். கடந்த பல ஆண்டுகளில், மேற்கு பகுதியைத் பெரும் அளவில் வளர்ச்சி செய்ய தொடங்கிய போது, அதன் தனிச்சிறப்பியல்புக்கு இணங்க, ning xia பிரதேசம், சிறிதாக இருந்தாலும், செழுமை, வலிமை, அழகு மிக்கதாக இருப்பது என்ற வளர்ச்சி குறிக்கோளை ning xia முன்வைத்தது. இவ்வாண்டின் தொடக்கத்தில், வெளியிடப்பட்ட மொத்த பரவல் பிரதேச ஒழுங்கில், ning xia, நாட்டின் முக்கிய நிலக்கரி பிரதேசமாக மாறியுள்ளது. ஏனென்றால், ஆசியாவில் மிக பெரிய நிலக்கரி வேதியியல் தொழிற்துறை தளமான ning dong எரியாற்றல் தளத்தை ning xia கட்டியமைத்து வருகின்றது. இத்திட்டம், ning xiaவின் முதல் திட்டப்பணி எனக் கூறப்படுகிறது. இதன் மொத்த முதலீடு, 30 ஆயிரம் கோடி யுவானைத் தாண்டும். Wang zhengwei கூறியதாவது.


அறிவியல் பூர்வமான வளர்ச்சிக் கண்ணோட்டத்தை நடுவண் அரசு முன்வைத்தப் பின், ning xiaவின் பொருளாதார வளர்ச்சி முறையை எவ்வாறு மாற்றியமைப்பது என்பது நாங்கள் ஆலோசிக்கும் பிரச்சினையாகும். ஆதியிலிருந்து தொடங்கி, கட்டமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். கடந்த பல ஆண்டுகளின் ஆராய்ச்சிகள் மூலம், ning xia hui இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் முதல் திட்டப்பணியான ning dong வேதியியல் தொழிற்துறை தளத்தை வளர்க்கும் திட்டத்தை ning xia மேற்கொள்வதென முடிவெடுத்தது. இந்த முதல் திட்டப்பணி, ning xiaயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 4 மடங்கு அதிகரிப்புக்குப் பின்புலமாகும்.
முதல் திட்டப்பணி என்ற போதிலும், உயிரின வாழ்க்கைச் சூழலைத் தாங்குகின்ற ஆற்றல் மற்றும் வளர்ச்சியின் தொடரவல்ல தன்மையைப் பன்முகங்களிலும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று Wang zhengwei கூறினார். அவர் மேலும் கூறியதாவது.

 எதிர்வரும் மாபெரும் வளர்ச்சியை எதிர்நோக்கும் போது, நாங்கள், ning xiaயின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பைப் இழந்தாலும், சுற்றுச்சூழலை நன்கு கட்டுப்படுத்த வேண்டும். உயர் பயனும் நீர் சிக்கனமும் பசுமையும் வாய்ந்த வேளாண் தொழிலை வளர்க்க வேண்டும். இது, எங்கள் உயர்வான வளர்ச்சிக்கு வழியாகும் என்றார் அவர்.
கடந்த சில ஆண்டுகளில், ning xiaவின் கம்பளி, சீன வால்பெரி திராட்சை, மது தொழிற்துறைகள் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளன.
ning xiaவில் தயாராகும் சிவப்பு நிறமான"ning xia hong" திராட்சை மது மற்றும் "qi nong"மது ஆகியவை, சீனாவிலுள்ள பல்வேறு மாநகர்களில் விற்பனையாகின்றன. அதே வேளையில், அவை உலகில் பலமுறை விருதுகளைப் பெற்றுள்ளன. வெளிநாட்டுச் சந்தையில் அவை மிகவும் வரவேற்கப்படுகின்றன. எனவே இவை, ning xiaவின் புதிய தொழில் சின்னங்களாக மாறியுள்ளது.
அதே வேளையில், ning xia கிராமப்புறத்தின் அடிப்படை வசதிகள், மேம்பாடு பெற்றுள்ளன. விவசாயிகளின் வருமானம், இடைவிடாமல் உயர்ந்து வருகின்றது. Wang zhengwei பார்வையில், மக்கள், மேலும் அதிக நன்மைகளைப் பெறுவது, பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையாகும்.

பொருளாதாரம் விரைவாக வளரும் அதே வேளை, மக்கள் வளர்ச்சியின் கனிகளை அனுபவித்துள்ளனர். இவ்வாண்டு, சீனாவில், ஒரே ஒரு hui இன தன்னாட்சிப் பிரதேசமான ning xia, தன்னாட்சிப் பிரதேசத்தின் 50வது ஆண்டு நிறைவாகும். ning xia, தற்சார்பு மேம்பாட்டோடு வளர்ச்சிகளை நாடும் வகையில், சீர்திருத்தலை இடைவிடாமல் புத்தாக்கம் செய்து சிறிதாக இருந்தாலும் வலிமை என்ற புதிய வளர்ச்சிப் பாதையை நாடி வருகின்றது.