• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-28 09:23:23    
மகளிர் கால் பந்து போட்டி

cri
2008ம் ஆண்டு குவாங் சோ 4 நாட்டு மகளிர் கால் பந்தாட்ட போட்டி 20ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகரில் நிறைவடைந்தது. சீன அணி இப்போட்டியில் இரண்டாவது இடம் பெற்றது.

ஆட்டத்தில் அமெரிக்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீன அணியைத் தோற்கடித்து, இப்போட்டியின் சாம்பியன்பட்டத்தை பெற்றது. கனடா மூன்றாம் இடம் வகித்தது.
சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் சீன ஒலிம்பிக் குழுயின் ஏற்பாட்டில் "2008 ஒலிம்பிக் நுண்கலை மாநாடு" என்ற நடவடிக்கை இன்று பெய்சிங்கில் துவங்கியது.
2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் பண்பாட்டு விழாவின் பல நடவடிக்கைகளில் இது ஒன்றாகும். கலை, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு மேலும் மெருகு ஊட்டுகிறது என்பது இதன் முக்கிய கருவாக அமைகிறது. 80 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த புகழ் பெற்ற கலைஞர்கள் இந்நடவடிக்கையில் கலந்துகொள்கின்றார்கள். இப்படைப்புகளில், பாரம்பரிய சீன ஓவியம், எண்ணெய் ஓவியம், சிற்பக்கலை, டிஜிட்டல் கலை முதலியவை இடம் பெறுகிறன. படைப்புக்களை திரட்டும் பணி இன்று துவங்கின.
பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கு சேவை செய்யும் வகையில், 9400 வாகனங்களும் 17 ஆயிரம் ஓட்டுநர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒலிம்பிக் பேருந்து சிறப்பு நெறி மற்றும் செயல்பாட்டு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. பெய்சிங் மாநகர தொடர்புடைய வாரியத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

கடந்த ஆண்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் ஊனமுற்றவர்களுக்கான ஒலிம்பிக் போட்டிக்கான போக்குவரத்து செயல்பாட்டு திட்டத்தைப் பெய்சிங் மாநகரம் வகுத்து, பல்வேறு போக்குவரத்து சேவையின் வரையறையை உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், பேருந்து, சுரங்க இருப்புப்பாதை, வாடகைச் சிற்றுந்து ஆகியவற்றிலான பணியாளர்களுக்கு ஒலிம்பிக் பயிற்சியை மேற்கொண்டுள்ளது என்று அறியப்படுகின்றது.
2007-2008 ஆண்டுக்கான ஸ்பெயின் கால்பந்தாட்ட மன்றங்களுக்கிடையிலான போட்டியின் 20வது சுற்றின் அனைத்து ஆட்டங்களும் 21ம் நாள் முடிவடைந்தன. போட்டியின் தரவரிசையில் முதலிடத்திலுள்ள அணியின் வீரர்களான Ruud van Nistelrooy, Raul Gonzalez ஆகியோர் அடித்த கோல்கள் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் Atletico Madrid அணியை ரியர் மாட்ரிட் வென்றது. 50 புள்ளிகளைப் பெற்ற நிலைமையில், இது போட்டியின் தரவரிசையில் முதலிடம் வகித்து வருகிறது.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா
பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடக்க விழாவின் தீபத்தை ஏற்றும் வழிமுறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், திட்டவட்டமான நுணுக்கங்கள், இரகசியமானது என்றும் சீனாவில் 10 பேர் மட்டமே, அதை அறித்துள்ளனர் என்றும் பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தொடக்க மற்றும் நிறைவு விழா பணியகத்தின் துணைத் தலைவர் zhu hong இன்று பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
தொடக்க விழா சடங்கு, கலைநிகழ்ச்சிகள், வீரர்கள் விளையாட்டரங்கில் நுழைவது, தீபத்தை ஏற்றுவது ஆகிய 4 பகுதிகளை இத்தொடக்க விழா உள்ளடக்கும்.
முந்தைய எல்லா ஒலிம்பிக் விளையாட்டு போட்டியிலும் தொடக்க விழாவில், மக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அளித்துள்ளது. தீபத்தை ஏற்றும் வழிமுறை என்பது குறிப்பிடதக்கது.