• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-29 14:24:54    
தௌ ரென் திங் பூங்கா (ஆ)

cri

தௌ ரென் திங் பூங்கா, பழங்கால பாணி மற்றும் நவீன கலை நுட்பம் வாய்ந்த, சீனத் தேசிய இனப் பண்பாட்டை முக்கிய உள்ளடக்கமாகக் கொண்ட நவீன, புதிய ரக நகரத் தோட்டமாகும்.

பூங்காவில், மரங்களும் மலர்களும் அடர்த்தியாக வளர்ந்து காணப்படுகின்றன. கோயில்களும் அரண்மனைகளும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. விதான மண்டபத்தின் காட்சி, அழகாக காணப்படுகிறது. ஏரியின் நடுவில் Jinqiudun மற்றும் Yantoushan மலைகள் இருக்கின்றன. Jinqiudun மலை முகட்டில் Jinqiu விதான மண்டபம் உள்ளது. அது, Huaxianciஇன் சிதிலம் ஆகும். இவ்விதான மண்டபத்தின் தென் பகுதியில், ரோஜா மலை இருக்கிறது. அது, Yuanxiang, Yingwu மற்றும் Saijinhua கல்லறைகளின் சிதிலமாகும். விதான மண்டபத்தின் வட பகுதியிலுள்ள தேவதாரு மரங்களில், புகழ்பெற்ற Gaojunyu, Shipingmei ஆகியோரின் கல்லறைகள் இருக்கின்றன. Yantoushan மலையின் முகட்டிலுள்ள Lancuiting விதான மண்டபத்தில் நின்று, Jinqiuting விதான மண்டபத்தைக் காணலாம். அதன் தென்மேற்கு பகுதியிலுள்ள Chengguangting விதான மண்டபத்தில் நின்று, ஏரியையும் மலைகளையும் பார்வையிடுவது, மிக நன்றாக இருக்கிறது. இவ்விதான மண்டபத்தின் வடக்கில், Changqingxuan இருக்கிறது.

1985ம் ஆண்டு, தௌ ரன் திங் பூங்காவில், Huaxiamingting பூங்கா கட்டியமைக்கப்பட்டது. இது, இப்பூங்காவிலுள்ள உட்புற பூங்காவாகும். இங்கு, உள்நாட்டின் புகழ்பெற்ற விதான மண்டபங்களை மாதிரியாக வைத்துக் கொண்டு, பல விதான மண்டபங்கள் கட்டியமைக்கப்பட்டன. அவை, இயற்கைக் காட்சிகளுடன் இணைந்து, அழகாக இருக்கின்றன. இந்தப் பூங்காவைப் பார்வையிட்டு, சீனாவின் பல சுற்றுலா இடங்களில் பயணம் மேற்கொள்வதைப் போன்று, இங்குள்ள அழகான வரலாற்றுப் பண்பாட்டை உணர்ந்து கொள்ளலாம்.

தௌ ரன் திங் பூங்காவில், மொத்தம் 36 விதான மண்டபங்கள் இருக்கின்றன. ஆண்டுதோறும், 70 இலட்சம் பேர் பயணம் மேற்கொள்கின்றனர்.

இங்கு, பல விளையாட்டு வசதிகள் இருக்கின்றன. பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பயணம் மேற்கொள்வதை இது தூண்டுகிறது.