• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2008-01-30 08:45:24    
மோசமான ஆடை எது?

cri
ஒருமுறை இளவரசன் ச்சுவை சந்திக்க சென்ற தியன் ஷான் மிகவும் அழுக்கான மோசமான அடையுடன் சென்றுவிட்டார். இதைக் கண்ட இளவரசன், ஐயா நீங்கள் கொஞ்சம் மோசமான ஆடையை அணிந்துள்ளீர்களே என்று கூறினேன்.
அதற்கு தியன் ஷான் "இதை விட மோசமான ஆடைகள் உண்டு இளவரசே" என்றார்.
அவை என்ன கொஞ்சம் சொல்லுங்களேன்? என்று இளவரசன் பணிவுடன் கேட்க அதற்கு தியன் ஷான் "கவச ஆடை" என்றார்.
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா" என்று கேட்டான் இளவரசன்.
குளிர்காலத்தில் மேலும் குளிராக இருக்கும், கோடையில் மேலும் வெப்பமாக இருக்கும், எனவே கவச ஆடையை விட மோசமான ஆடைகள் ஏதுமில்லை. நான் ஏழை என்பதால் இயல்பாகவே என் ஆடைகள் மோசமானவையாக இருக்கின்றன. ஆனால் நீயோ ஒரு இளவரசன், பத்தாயிரம் ரதங்களும், கணக்கிடமுடியா செல்வமும் கொண்டவன், இருப்பினும் நீ கவச ஆடை அணிபவர்களையே விரும்புகிறாய். எனக்கு ஒன்று புரியவில்லை. ஒருவேளை நீ புகழ்விரும்பியாய், புகழுக்காய் அதிகம் நாட்டமுள்ளவனாய் இருக்கக்கூடும். ஆனால், கவச ஆடை போரில் பயன்படுத்தப்படுகிறது. போரிடும் மாந்தர் தலைகள் கொய்யப்படுகின்றன, உடல் ஈட்டி, அம்பு உள்ளிட்ட கூராயுதங்களால் துளைக்கப்படுகின்றன, அவர்களது நகரங்கள் தரமட்டமாக்கப்படுகின்றன, அவரது பெற்றோரும், பிள்ளைகளும் சித்திரவதை செய்யப்பட்டு துன்புறுகின்றனர்.
ஒருவேளை நீ இலாபத்தில் நாட்டம் கொண்டிருக்கலாம். ஆனால் நீ மற்றவரை துன்புறுத்தினால், மற்றவர்கள் உன்னை துன்புறுத்த முயல்வர். அவர்களது உயிருக்கு நீ ஆபத்து ஏற்படுத்தினால் உன் உயிருக்கு ஊறுவிளைவிக்க அவர்கள் காத்திருப்பர். ஆக நீ உன் மக்களுக்கு தொல்லையை தவிர எதையும் கொண்டுவர இயலாது. ஒருவேளை நான் நீயாக இருந்தால், நான் புகழுக்கும் சரி, இலாபத்துக்கும் சரி போரில் ஈடுபடமாட்டேன் என்றார் தியன் ஷாவ்.
இளவரசன் ச்சு சொல்ல வார்த்தையின்றி மௌனமானான்.